. Editor – Page 7 – Jaffna Journal

சிறுமிகள் துன்புறுத்தல்: வட்டுக்கோட்டை ஆசிரியரின் மறியல் நீடிப்பு

தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியலை வரும் 14 நாள்களுக்கு நீடித்து மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா இன்று உத்தரவிட்டார். “ஆசிரியர், கௌரவமான குடும்பத்தில் பிறந்து வளந்தவர். கௌளரவமாக மணம்... Read more »

மாண்புமிக்க இனமொன்றை இராணுவ இயந்திரத்தின் துணையோடு இலங்கையின் பேரினவாத அரசு மௌனமாகக் கொலைசெய்கின்றது

“நேற்று ஒரு தங்கைக்காக ,இன்று ஒரு சிறுமிக்காக, நாளை இன்னுமோர் உறவுக்காக எனப் பெயரளவில் கூடிநின்று ஆர்ப்பரித்துவிட்டு ஓய்ந்துவிடப்போகிறோமா? இன்று போதைப்பொருள் பாவனையும், பாலியல் குற்றங்களும், கொலை கொள்ளைகள், குழு மோதல்கள், சாதியின் பெயரால் கலவரங்கள் என்பன அதிகரித்த ஒரு வஞ்சிக்கப்பட்ட பூமியாகிவிட்டது எம்... Read more »

ஆரம்ப பிரிவு மாணவர்களை பெற்றோர் அல்லது அங்கீகரிக்கப்பட்டவரே அழைத்துச் செல்ல முடியும் – வடமாகாண கல்வி அமைச்சர்

வடக்கு மாகாணத்தின், பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களை, பாடசாலை முடிந்ததும் பெற்றோர்களோ அல்லது பெற்றோர்களால் பெயர் குறிப்பிடப்பட்டு நியமிக்கப்பட்ட வர்களோ மட்டுமே வந்து அழைத்துச் செல்ல வேண்டும்” இவ்வாறு வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அறிவித்துள்ளார். மாணவி சிவனேஸ்வரன்... Read more »

சுழிபுரத்தில் தொடரும் பதற்றம் – நாளை கடையடைப்பு!!

சுழிபுரத்தில் கொல்லப்பட்ட சிறுமியின் படுகொலைக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் அவ்விடத்திலேயே கூடாரத்தை அமைத்துப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கல்வி அமைச்சு ஊடாக மாணவிகளின் பாதுகாப்புக்கு உரிய தீர்வு பெற்றுத் தரக் கோரி மாணவர்களும் சுழிபுரம் மக்களும் இன்று காலையிலிருந்து சுமார்... Read more »

மானிப்பாயில் வயோதிப் பெண் திட்டமிட்ட கொலை?

மானிப்பாயில் வயோதிபப் பெண் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கொலைச் சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மானிப்பாய் கல்லூரி ஒழுங்கை என்ற விலாசத்தில் தனித்து வாழும் நாகரத்தினம் குமராசாமி (வயது-88) என்பவரது... Read more »

சுழிபுரம் சிறுமிக்கு நீதிகோரி நாளை கடையடைப்பு

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட 6 வயதுச் சிறுமி றெஜீனாவுக்கு நீதிகோரி நாளை யாழ்ப்பாணத்தில் முழுக்கடையடைப்பை நடத்த அனைவரையும் ஒத்துழைக்குமாறு அந்தப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுழிபுரம் பிரதேச மக்கள் மற்றும் மாணவர்கள் தற்போது வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், நாளை... Read more »

காவல் துறையா? கஞ்சாத் துறையா?? – யாழ் பல்கலை மாணவர்கள் கவனவீர்ப்புப் போராட்டத்தில்!!

சுழிபுரம், பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் பல்கலைக்கழக முன்றலில் ஆரமம்பித்த இப் போராட்டம் பலாலி வீதிவரை சென்று இரு மருங்கிலும் ஆபர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். காவல்துறை கயவர்களுடனா, காவல் துறையா கஞ்சா துறையா,... Read more »

4,800 பட்­ட­தா­ரி­க­ளுக்கே அடுத்த மாதம் நிய­ம­னம்!!

கடந்த ஏப்­ரல் மாதம் இடம்­பெற்ற நேர்­மு­கத் தேர்­வு­க­ளில் தெரிவு செய்­யப்­பட்ட பட்­ட­தா­ரி­க­ளில் 4 ஆயி­ரத்து 800 பேருக்கு முதல்­கட்­ட­மாக நிய­ம­னம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் இடம்­பெற்ற அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­திலே அனு­மதி கிடைக்­கப் பெற்­றுள்­ளது. பட்­ட­தா­ரி­களை அரச சேவை­யில் இணைத்­துக் கொள்­வ­தற்­காக... Read more »

மானிப்பாயில் பெண் ஒருவர் வெட்டிக்கொலை!

மானிப்பாய் லோட்டன் வீதியிலுள்ள வீடொன்றிலில் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வீடு புகுந்த இருவர் பெண்ணை வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பித்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் (28) இடம்பெற்றது. நீலாதேவி (வயது -69) என்ற பெண்ணே உயிரிழந்து குருதி வெள்ளத்தில் மீட்கப்பட்டார் என்று... Read more »

மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ள அஞ்சல் ஊழியர்கள்!

அஞ்சல் பணியாளர்களின் இரண்டு வார கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ள போதும், இன்று (வியாழக்கிழமை) முதல் சட்டப்படி வேலைசெய்யும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிதாக ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 16 நாட்களாக முன்னெடுத்து வந்த போராட்டம், நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்நிலையில்,... Read more »

பிஸ்கட், ஜெலியை உண்ணகொடுத்து மாணவியை மூன்றுபேர் அழைத்து சென்றனர் : மாணவனின் திடுக்கிடும் சாட்சி!

சுழிபுரம் பகுதியில் சிறுமியொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஏழு வயது சிறுவனொருவன் வாக்குமூலம் வழங்கியுள்ளான். இதனடிப்படையில் பொலிஸார் உண்மையான குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேரில் பார்த்த சாட்சிகள் கிடைக்காத நிலையில் நேற்று (புதன்கிழமை)... Read more »

சுழிபுரத்தில் நிலக்கீழ் கசிப்பு உற்பத்தி: பொலிஸாரின் சுற்றிவளைப்பில் ஒருவர் கைது!!

சுழிபுரம் பகுதியில் நிலத்துக்கீழ் பங்கர் வெட்டப்பட்டு கசிப்பு உற்பத்தி செய்து வந்த ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது. “சுழிபுரம் மத்தியில் நேற்றுமாலை நடத்தப்பட்ட தேடுதலில் இந்த கசிப்பு உற்பத்தியிடம் முற்றுகையிடப்பட்டது. 27 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டது. கசிப்பை உற்பத்தி வந்தவர்... Read more »

யாழ்.நகரில் ஐஸ்கிறீம் தானப்பந்தல்

யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பவியல் கல்லூரியின் எந்திரவியல் டிப்ளோமா மாணவர்களால் பொசன் போயாவை முன்னிட்டு ஐஸ்கிறீம் தானப்பந்தல் சேவை யாழ்ப்பாண மாநகரில் நேற்றயதினம் நடத்தப்பட்டது. எந்திரவியல் டிப்ளோமா சிங்கள மாணவர்களால் நடத்தப்பட்ட இந்த ஐஸ்கிறீம் தானப்பந்தலில் தமிழ் மாணவர்களும் ஒத்துழைப்பை வழங்கினர். யாழ்ப்பாணம் பிரதான வீதியில்... Read more »

மானிப்பாயில் வாள்வெட்டுக் கும்பல் அட்டூழியம்!!

மானிப்பாய், லோட்டன் வீதி இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள வீட்டுக்குள் இன்று காலை புகுந்த கும்பல், பெற்றோல் குண்டுத் தாக்குதல், வாள்வெட்டு என பெரும் அட்மூழியத்தில் ஈடுபட்டு தப்பித்துள்ளது. வாள்வெட்டுக் கும்பலால் அந்த வீட்டின் மீது நடத்தப்படும் இரண்டாவது பெரும் தாக்குதல் இதுவாகும். “10... Read more »

றெஜினாவுக்கு நீதிகேட்டு சுழிபுரத்தில் ஆர்ப்பாட்டம்

மாணவியின் படுகொலைக்கு நீதிகேட்டு சுழிபுரம் சந்தியில் நூற்றுக் கணக்கான மாணவர்களும் பொது மக்களும் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் இன்று காலை 7.15 மணிக்கு ஆரம்பமானது. மானிப்பாய் – பொன்னாலை வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம்... Read more »

கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்டு சிறுமி கொலை – சட்ட மருத்துவ அதிகாரி

“சிறுமியின் கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்டதால் மூச்சடங்கி உயிரிழந்துள்ளார். சிறுமியை கொலை செய்யும் நோக்குடனேயே கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டுள்ளது” என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி மயூரதனின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை தெரிவிக்கின்றது. சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி... Read more »

சுழிபுரம் சிறுமி படுகொலை: நீதிகோரி மாணவர்கள் வீதியில்!

சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஆறு வயது சிறுமிக்கு நீதி கோரி பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. காட்டுப்புலம் அ.த.க பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் இணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காட்டுப்புலத்தில் மாணவி படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து காட்டுப்புலம் அ.த.க... Read more »

பல்கலை.மாணவர்கள் படுகொலை: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பொலிஸார் மூவரும் அரச சாட்சிகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்க சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் அரச சாட்சிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று அறிவிக்கப்பட்டது. ஏனைய இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராகும் இலங்கை குற்றவியல் சட்டக் கோவை... Read more »

சிறுமியைக் கொலை செய்ததாக ஒருவர் ஒப்புதல்!!! மனநோயாளி போல் நடிக்கும் சந்தேகநபர்!!

“சிறுமியைக் கொலை செய்தது தான் மட்டுமே என ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் சரியான காரணத்தை கூறாமல் மாறுபட்ட தகவல்களை வழங்கி அவர் மன நோயாளி போல் நடிக்கிறார்” என்று வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை காலை வரை... Read more »

யாழ் பல்கலையில் தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடையே நல்லதோர் ஐக்கியம் காணப்படுகிறது!!

தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடையே நல்லதோர் ஐக்கியம் காணப்படுவதாகத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஷ்ணமீனன், எமக்கிடையே எந்தவொரு பிரச்சினையும் இல்லையெனவும் குறிப்பிட்டார். யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட இறுதி வருட சிங்கள மாணவர்களுக்கு இடையே, நேற்று முன்தினம் (24) மாலை... Read more »