முகத்தாடை சத்திரசிகிச்சை செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள்!!

முகத்தாடை சத்திரசிகிச்சை நிபுணத்துவக் குழாம் பல பாகங்களிலிருந்தும் யாழ்ப்பாணம் வருகை தந்து ஏப்ரல் மாத பிற்பகுதியில் மேலதிக சிகிச்சைகளை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது. மேற்படி சிகிச்சையில் கலந்து கொண்டு பயன்பெற விரும்புவோர் யாழ். போதனா வைத்தியசாலை முகத்தாடை வாய் சத்திரசிகிச்சைப் பிரிவில் (OMF Unit) கிழமை... Read more »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவு!!

பிரதமருக்கு எதிராக கூட்டு எதிர்கட்சியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிதானந்த அளுத்கமகே, பாராளுமன்றத்தை பிரநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமது ஆதரவினை வழங்க தீர்மானித்துள்ளது. ஆனால்... Read more »

ரிஷாட்டின் பொறுப்பில் வடக்கின் புனர்வாழ்வு!

வடக்கின் புனர்வாழ்வு மற்றும் வன்னி மாவட்ட அபிவிருத்தி ஆகிய பொறுப்புகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வணிக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு வழங்கப்பட்டுள்ளன. புதிய அமைச்சரவை மாற்றம் குறித்து வெளியாகிய வர்த்தமானி அறிவித்தலிலேயே மேற்படி விடயம் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில் வடக்கு... Read more »

யாழ். பல்கலைக் கழக ஊழியர்கள் கொடும்பாவி எரித்துப் போராட்டம்

யாழ். பல்கலைக் கழக ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலில் கொடும்பாவி எரித்துப் போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்ற நிலையில், பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பிரிவினர் போராட்டத்துக்கு குழப்பம் விளைவித்தமையினால் கொடும்பாவி... Read more »

யாழ். மருத்துவ பீடத்தின் 40ஆம் ஆண்டு நிறைவு

யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் 40ஆம் ஆண்டு நிறைவினை ஒட்டி யாழ். மருத்துவ பீடமும் வட. மாகாண சுகாதார அமைச்சும் இணைந்து நடாத்துகின்ற மருத்துவ கண்காட்சி எதிர்வரும் 4, 5, 6, 7ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை யாழ்.... Read more »

யாழில் ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் -நெள்ளுக்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தின் போது 55 வயதுடைய தயா என்ற முதியவரே உயிரிழந்துள்ளார். மேலும், மக்கள் பாவனை இல்லாத வீதியில் சென்ற... Read more »

யாழில் இருந்து மன்னாருக்கு 6 ரூபாய் 50 சதம்?

யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கு செல்வதற்கு 6 ரூபாய் 50 சதம் பயண சீட்டை கொடுத்தமை, பயணிகளுக்கு பயண சீட்டை வழங்காமை, கணக்கிற்கு அதிகமாகவும், குறைவாகவும் பயண சீட்டு பணங்களை வைத்திருந்தமை முதலான குற்றச்சாட்டுக்களின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் நடத்துனர்களுக்கு கடுமையான... Read more »

நாவற்குழி இளைஞர்கள் வழக்கு: ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்யும் கோரிக்கை நிராகரிப்பு

யாழ். நாவற்குழியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் குறித்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்யும் கோரிக்கையை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நிராகரித்துள்ளார். குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட... Read more »

வடமராட்சியில் மகள் வெட்டிக்கொலை!! தாய் படுகாயம்!!!

வடமராட்சி கிழக்கு, அம்பன் – குடத்தனையில் வீடொன்றுக்குள்ளிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது தாயார் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது. “அந்த வீட்டில் தாயும் மகளுமே வசித்து வந்தனர். கொள்ளைக் கும்பல் ஒன்றே இந்தக் கொடூரச்... Read more »

புலிகளின் முக்கிய தளபதிகள் உயிரிழக்க ஸ்ரீதரனே காரணம்!!

“தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள்” என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் எம்.ரெமிடியஸ் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற... Read more »

கூட்டமைப்பு குற்றச்சாட்டுகளிலிருந்து எம்மை விடுவித்துள்ளது : ஈ.பி.டி.பி

“ஈ.பி.டி.பி கட்சி ஒட்டுக்குழு என்றும், தமிழ் உறவுகளை காணாமல் ஆக்கியவர்கள் என்றும் எம்மீது பொய் குற்றச்சாட்டுக்களை கூறி வீண்பழி சுமத்தி வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க எங்களின் ஆதரவை பெற்றுள்ள நிலையில் அப் பொய் குற்றச்சாட்டுக்களில் இருந்து எங்களை விடுவித்துள்ளது”... Read more »

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு கடன் வழங்கும் போது பேரம் பேசப்படுகின்றதா?

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு கடன் வழங்கும் போது பேரம் பேசப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலில்... Read more »

இளைஞர்களுக்கிடையில் மோதல்: நால்வர் படுகாயம்!

பாசையூர் அந்தோனியார் கோவில் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக அந்தப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த சம்பவத்தையடுத்து அங்கு பொலிஸார் மற்றும் விசேட படையினர் வரவழைக்கப்பட்ட நிலையில் நிலைமை சுமூகமடைந்துள்ளது பாசையூர் இளைஞர்களுக்கும் ஈச்சமோட்டை இளைஞர்களுக்கும் இடையில் இடம்பெற்ற... Read more »

பாடசாலை மாணவன் மீது கத்திக்குத்து!

புளியம்பொக்கனை ஆலய வளாகத்தில் பாடசாலை மாணவன் மீது கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்டவர்கள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி, புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்வசத்திற்கு வருகை தந்திருந்த கிளிநொச்சி பிரபல பாடசாலை ஒன்றின் மாணவனே கடந்த வெள்ளிக்கிழமை கத்தி... Read more »

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஈ.பி.ஆர்.எல்.எப். நிபந்தனை!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சில கோரிக்கைகளை முன்வைத்து கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கோரிக்கைகளுக்கு கிடைக்கப்பெறும் பதில்களை பொறுத்தே... Read more »

வடக்கின் பாரம்பரிய உணவகம் திறந்து வைப்பு!

வடக்கின் பாரம்பரிய உணவகமான “அம்மாச்சி” உணவகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் கீரிமலையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதனை நல்லிணக்க செயலணியின் தலைவி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க திறந்து வைத்தார். வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் வட. மாகாணத்தில் சகல பகுதிகளிலும் “அம்மாச்சி” உணவகம் திறக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கீரிமலை... Read more »

நம்பிக்கையில்லாப் பிரேரணை தமிழ் மக்களுக்கு நன்மையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்: முதலமைச்சர்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, தமிழ் மக்களுக்கு ஏதேனும் நன்மையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாராந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும், அறிக்கையின் ஊடாகவே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். இதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ் மக்களுக்கு... Read more »

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றன!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பக்க அமர்வொன்றில் இலங்கை கடற்படை அதிகாரிகளின் குற்றச்சாட்டை மறுதலித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் கொடுக்கப்பட்ட விளக்கத்தைத் திரிவுபடுத்தி செய்திகளை வெளியிட்டு சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றன என... Read more »

பல்கலை மாணவர்கள் படுகொலை: சந்தேகநபர்கள் ஐவரும் மீளவும் பொலிஸ் சேவையில் இணைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களான 5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் மீளவும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர். 5 பொலிஸாரும் சேவையில் மீள இணைக்கப்பட்டதனையடுத்து அவர்களின் பிணை நிபந்தனைகளில் ஒன்றை இலகுபடுத்தப்படுத்துமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம்... Read more »

ஆனந்தசுதாகருக்கு பொது மன்னிப்பளிப்பது தொடர்பில் உரிய நடவடிக்கை!! பிள்ளைகளிடம் ஜனாதிபதி உறுதி!!!

அரசியல் தண்டனைக் கைதி சச்சிதானந்தன் ஆனந்தசுதாகருக்கு பொது மன்னிப்பளிப்பது தொடர்பில் உரிய நடவடிக்கையை முன்னெடுப்பதாக அவரது இரண்டு பிள்ளைகளிடமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று காலை ஆனந்தசுதாகரின் புதல்வனும் புதல்வியும் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இந்த உறுதிமொழியை... Read more »