. Editor – Page 5 – Jaffna Journal

ஐ.நா. பிரேரணையை அமுல்படுத்துவதில் அமெரிக்கா உறுதி! – சம்பந்தன்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஐ.நா.வுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இவ்வருடத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளதென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகராக கடமையாற்றி வந்த அதுல் கெஷாப், தனது பதவிக்காலம் நிறைவடைந்து செல்லவுள்ளார்.... Read more »

வாள்வெட்டுக் கும்பலின் வன்முறையில் மாணவன் உள்பட இருவர் காயம்!!

கொக்குவில் மற்றும் குப்பிளான் ஆகிய இடங்களில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பலின் வன்முறைகளில் காயமடைந்த மாணவன் உள்பட இருவர் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொக்குவில் மேற்கு பகுதியில் வீடொன்றுக்குள் நேற்றிரவு 8 மணியளவில் புகுந்த இருவர், குடும்பத்தலைவரை கூரிய ஆயுதங்களால் தாக்கிக் காயப்படுத்திவிட்டுச் சென்றனர் என்று... Read more »

விஜயகலாவின் உரைக்கு கோஷமெழுப்பியவர்கள் மீது விசாரணை!

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் அநாகரிகமாக நடந்து கொண்ட அரச ஊழியர்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், கடிதம் மூலம் நேற்று (செவ்வாய்க்கிழமை) சகல பிரதேச செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார். ‘ஐனாதிபதியின்... Read more »

வடக்கில் வன்முறைகள் அதிகரிப்பு!- பொலிஸாரின் விடுமுறைகள் ரத்து

யாழ். மாவட்டத்தில் அண்மைக் காலமாக வன்முறைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், அங்கு பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய, யாழ். மாவட்டத்தில் கடமையாற்றும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்குமான விடுமுறைகள் இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை இரத்து செய்யப்படுவதாக... Read more »

வேலையற்ற விரக்தி நிலையில் பட்டதாரி இளைஞன் தற்கொலை!

தென்மராட்சிப் பகுதியில் பட்டதாரி இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பட்டதாரியான அவர் வேலையற்ற விரக்தி நிலையிலேயே உயிரை மாய்த்துக்கொண்டதாககத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் (02) பகல் வேளையில் கொடிகாமம் கச்சாய் துறைமுகச் சாலையில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த கிருஸ்ணபிக்ளை சத்தியசீலன்... Read more »

யாழ். மாநகர சபை உறுப்பினரை பதவி நீக்கக் கோரி வழக்கு தாக்கல்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணனின் யாழ்.மாநகர சபை உறுப்புரிமையை நீக்க கோரி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக மாநகர... Read more »

அதிகரிக்கும் சிறுவர் துன்புறுத்தல்கள்: 6 மாதத்தில் 4,831 முறைப்பாடுகள்

சிறுவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. வருடத்தின் 6 மாத காலத்திற்குள், துன்புறுத்தல் தொடர்பில் 4,831 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சபையின் பணிப்பாளர் நாயகம் அனோமா சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார். சிறுவர்களைத் துன்புறுத்துவது தொடர்பில் 1,201 முறைப்பாடுகளும் வன்கொடுமை... Read more »

கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா விஜயகலா?

அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க முக்கிய அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, விஜயகலாவிற்கு எதிராக... Read more »

நான் பதற்றத்தில் அவ்வாறு கூறிவிட்டேன்! விடுதலைப் புலிகள் மீளவும் புத்துயிர் பெற முடியாது!! – அமைச்சர் விஜயகலா பல்டி

“நான் பதற்றத்தில் அவ்வாறு கூறிவிட்டேன். விடுதலைப் புலிகள் மீளவும் புத்துயிர் பெற முடியாது. போதைப்பொருளால் ஏற்படும் அச்சுறுத்தல்களை நிறுத்தவேண்டும் என்பதே எனது நோக்கம்” இவ்வாறு மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று பல்டி அடித்தார். பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில்... Read more »

மல்லாகத்தில் பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச்சூட்டில் சாவு!!

மல்லாகம் பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். அவரது துப்பாக்கியே தவறுதலாக வெடித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. தெல்லிப்பழை பொலிஸ் நிலைய அதிகாரியே உயிரிழந்துள்ளார். அவர் கடமையிலிருந்தபோதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று தெரியவருகின்றது. உயிரிழந்தவர் திருகோணமலை, கந்தளாய்ப் பகுதியைச் சேர்ந்த என்.நஷீர்... Read more »

கிளிநொச்சியில் விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு

பாதசாரிகள் கடவையை கடக்க சென்ற மாணவியொருவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. பாடசாலைக்கு அருகில் பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்ட மாணவி மீது கிளிநொச்சியிலிருந்து யாழ். நோக்கி பயணித்த வாகனமொன்று மோதியதில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை குறித்த விபத்து சம்பவித்துள்ளது. பரந்தன்... Read more »

விடுவிக்கப்பட்ட காணிகளில் இராணுவத்தின் இருப்பு தொடர்கிறது: முதலமைச்சர்

உயர் பாதுகாப்பு வலயங்களாக காணப்பட்ட மக்கள் காணிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், இராணுவத்தின் இருப்பு அங்கு தொடர்வதால் மக்கள் குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவுடன்... Read more »

யாழ். சிறுமியின் படுகொலையை கண்டித்து மன்னாரில் அமைதி பேரணி!

யாழ். சுழிபுரம் மாணவி றெஜினாவின் படுகொலையை கண்டித்தும், நாடு முழுதும் இடம்பெறும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்கொடுமைகளை கண்டித்தும் மன்னார் முருங்கனில் அமைதி பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார் சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த அமைதி... Read more »

நாளை கல்வியாளர்கள் கொழும்பில் பெரும் ஆர்ப்பாட்டம்- பாடசாலைகளை மூடுமாறும் அழைப்பு!!

இலங்கை கல்வித்துறையில் தகுதியற்ற ஆயிரம் பேருக்கு நியமனங்கள் வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை கல்வி நிர்வாக சேவை சங்கம், அதிபர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் என 16 தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை 4 ஆம் திகதி புதன்கிழமை நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன... Read more »

பொலிஸ் பொறுப்பதிகாரியின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக்கோரி மக்கள் மகஜர்!

அக்கராயன் பொலிஸ் பொறுப்பதிகாரியின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரி வட.மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபரிடம் பிரதேச மக்கள் நேற்று (திங்கட்கிழமை) மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர். கிளிநொச்சி, அக்கராயன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சதுரங்கவின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரியே பிரதேச மக்களால் குறித்த... Read more »

மீண்டும் நாம் தமிழீழ விடுதலைப் புலிகளை உருவாக்கவேண்டிய தேவை எழுந்துள்ளது – அமைச்சர் விஜயகலா

தமிழர்கள் அனுபவித்துவரும் கொடுமைகளைப் பார்க்கும்போது மீண்டும் நாம் தமிழீழ விடுதலைப் புலிகளை உருவாக்கவேண்டிய தேவை எழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் எட்டாவது நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) யாழ். அரசாங்க... Read more »

வன்முறையின் மூலம் எதனையும் சாதிக்க முடியாது: சுமந்திரன்

வன்முறைகளினால் எவற்றினையும் சாதிக்க முடியாது. வடக்கில் வன்முறைகள் முற்றாக புறக்கணிக்கப்பட வேண்டும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த... Read more »

நல்லாட்சி அரசாங்கத்தை நம்பிப் பிரயோசனமில்லை: மாவை

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய ஒரு வாக்குறுதியை கூட இன்றளவும் நிறைவேற்றவில்லை. இனியும் இவர்களை நம்பிப் பிரயேசனமில்லை என தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் எட்டாவது நிகழ்வு யாழ்.... Read more »

முல்லைத்தீவில் எரிக்கப்பட்ட நிலையில் மனித எச்சங்கள்!

முல்லைத்தீவு ஒதியமலைப் பகுதியில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில், ஒருவரின் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நெடுங்கேணிப் பகுதியில் ஒருவர் காணாமல்போன சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இம்மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நெடுங்கேணியில் கடந்த ஏப்ரல் மாதம் ஒருவர் காணாமல் போயிருந்த... Read more »

தெல்லிப்பளையில் வாளுடன் இளைஞன் கைது!

தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு அருகில் கூரிய வாளுடன் நடமாடிய இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். மாவட்ட சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யூனியன் கல்லூரி வீதியூடாக பயணித்தபோது, அக்கல்லூரிக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த இளைஞன் அவ்விடத்தில் இருந்து... Read more »