. Editor – Page 4 – Jaffna Journal

எதிர்க்கட்சித் தலைவராக கடமைகளை பொறுப்பேற்கிறார் மஹிந்த!

புதிய எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்கிறார். அதன்படி சமய வழிபாடுகளை தொடர்ந்து இன்று காலை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில், தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார். புதிய எதிர்க்கட்சி தலைவர் நியமனம் பல்வேறு விமர்சனங்களை தோற்றுவித்திருந்த நிலையில்,... Read more »

இரணைமடுக் குளத்தின்மீது அரசின் கழுகுப்பார்வை விழிப்பாக இல்லாவிடில் குளம் பறிபோகும் அபாயம் -பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை

இரணைமடுக்குளம் மீண்டும் எல்லோரினதும் பேசுபொருளாக ஆகியுள்ளது. கொழும்பு அரசியல் கொந்தளிப்புகளின் மத்தியிலும் நேரமொதுக்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கிளிநொச்சி வந்து இரணைமடுவின் வான்கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறார். வெள்ள அனர்த்தங்களைப் பார்வையிடவந்த நீர்ப்பாசன அமைச்சர் ஹக்கீம் அவர்கள் இவ்வளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபிறகும் யாழ்ப்பாண மக்களுக்கு... Read more »

யாழில் உண்ணிக் காய்ச்சல் அபாயம்; பெண் உயிரிழப்பு!

உயிர் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய காய்ச்சல் ஒன்று யாழ்ப்பாணத்தில் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார் என யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. உரும்பிராயை சேர்ந்த 45 வயதான, இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 30ம் திகதி... Read more »

யாழ் மாநகரசபைக்கு கிடைத்த 12 மில்லியன் ரூபா செலவிடப்படாமல் திரும்பியது!

கடந்த வருடம் கிடைத்த 12 மில்லியன் ரூபா பணத்தை, செலவிடாமல், பத்திரமாக பாதுகாத்து திருப்பி அனுப்பியுள்ளது யாழ்ப்பாணம் மாநகரசபை. யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் 2014ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முத்திரைவரிப்பணம் கிடைக்காத காரணத்தால், அதற்கு பதிலாக மாகாண ஒதுக்கீட்டின ஊடாக 65 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது.... Read more »

ஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று ஆளுநருடைய யாழ்ப்பாண உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல் மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது Read more »

சிறைக்கைதிகள் மீதான தாக்குதல்: விசாரணைக்குழு விரைந்தது!

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரிக்க, விசாரணைக்குழு அங்கு செல்லவுள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தலைமையில் நியமிக்கப்பட்ட குறித்த குழு இன்று (வியாழக்கிழமை) அங்கு செல்லவுள்ளது. கைதிகள் தாக்கப்பட்டமை தொடர்பான காணொளியொன்று அண்மையில் வெளியாகியிருந்த நிலையில், அது தொடர்பில் பாரிய சர்ச்சைகள்... Read more »

பலாலி முகாமிற்குள் இராணுவ சிப்பாய் தற்கொலை!

யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமில் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டுவந்த இராணுவ சிப்பாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்தவர் பலாங்கொடைப் பகுதியைச் சேர்ந்த 22 வயதான என்.ஜி.வை.ஆரியரட்ண என அடையாளங் காணப்பட்டுள்ளார். பலாலியில் அமைந்துள்ள இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வந்த நிலையில் நேற்று... Read more »

இணுவில் விபத்து: பொலிஸ் உத்தியோகத்தர் கைது

இணுவில் பகுதியில் விபத்தை ஏற்படுத்தி சிறுவனொருவரின் உயிரிழப்பிற்கு காரணமாக விளங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் அதிகாரி இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளை தொடர்ந்து அவரை மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸாரால் தெரிவித்துள்ளனர். இணுவில்... Read more »

பொங்கு தமிழ் பிரகடனத்தின் 18ஆம் ஆண்டு நிறைவு!

யாழ். பல்கலைக்கழகத்தின் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 18ஆம் ஆண்டு நிறைவு தின நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்குதமிழ் நினைவு தூபிக்கு முன்னால் இடம்பெற்ற நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.... Read more »

நிலவுக்கு கொண்டு சென்ற சீன விதைகள் முளைத்தன

சீனாவின் சாங் இ–4 விண்கலம் மூலம் நிலவுக்கு எடுத்துச் செல்லபட்ட விதைகள் தளிர்விட்டிருப்பதாக சீன தேசிய விண்வெளி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. நிலவில் எந்த ஒரு உயிரியல் பொருளும் முளைவிட்டிருப்பது இது முதல் முறை என்பதோடு, நீண்டகால விண்வெளி ஆய்வுகளுக்கு இது முக்கிய முன்னெடுப்பாக கருதப்படுகிறது.... Read more »

வடக்கில் துரித அபிவிருத்திக்கு ரூபா 2000 மில். நிதி ஒதுக்கீடு

வடக்கில் பொருளாதார அடிப்படை வசதி ,சமூக அடிப்படை வசதி, ஜீவனோபாயம் மற்றும் சுயதொழில் வாய்ப்பு மற்றும் சிறிய கைத்தொழில்கள் மற்றும் தொழில் முயற்சி போன்ற நான்கு துறைகள் ஊடாக வடக்கில் துரித அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம்... Read more »

காவல்துறையினர் மீது தாக்குதல் – உப காவல்துறை பரிசோதகர் காயம்

சட்டவிரோத மணல் கடத்தல்காரர்களை கைது செய்ய சென்ற போது அவர்கள் காவல்துறையினரை தாக்கியுள்ளனர் என்று கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு ஏழு மணியளவில் தென்மராட்சி கொடிகாமம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட கெற்பேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. ‘கெற்பேலி கிராமத்தில் வழமை... Read more »

தைப்பொங்கல் நாளில் ஆரம்பமானது வீட்டுத் திட்டம்!

வடக்கு மற்றும் கிழக்கு வீடமைப்புத் திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்றையதினம் காலை இடம்பெற்றது. வலி.வடக்கு பிரதேச செயலகத்தின் தென்மயிலை கிராம அலுவலர் பிரிவில் முதலாவது வீட்டுக்கான அடிக்கல்லை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா நட்டார். இந்த நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்டச்... Read more »

தைப்பொங்கல் தினத்தில் யாழில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் நேற்றையதினம் (15) வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பட்டப்பகலில் நடைபெற்ற இவ்வாள்வெட்டு சம்பவத்தில் 2 இளைஞர்கள் படு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டதுடன் அதில் ஒரு இளைஞருடைய வலது கை கட்டைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மீட்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக... Read more »

தமிழ் மாணவர்கள் பல்கலைக்கு தேர்வாவதில் வீழ்ச்சி!

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்ற தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து செல்வதாக கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எஸ். சுதர்சன் கவலை வெளியிட்டுள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் சமூக சேவை ஒன்றியத்தின் தலைவர் என். நிராஜ் தலைமையில் வெள்ளி விழா காரைதீவு கலாசார மண்டபத்தில் கோலாகலமாக இடம்பெற்றது. இந்த விழாவில்... Read more »

வடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன் – ஆளுநர்

வடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன் என்று வடக்கின் புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். யாழ். இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற தைப்பொங்கல் தின விசேட நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் 2020 ஆம் மற்றும் 2021 ஆம்... Read more »

தமிழீழக் கனவோடு இருக்கக் கூடாது – எம்.ஏ.சுமந்திரன்

புதிய அரசமைப்பினூடாக, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும். தனி நாடு என்று காலத்துக்குக் காலம் கதைகள் வரும். ஒருமித்த நாட்டில் தமிழ் மக்களுக்கான தீர்வு வேண்டுமென்று தான் நாம் கேட்கிறோம். அதை விட்டு, தமிழீழக் கனவோடு இருக்கக் கூடாது. இப்படி நான் சொல்வதனால்,... Read more »

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் – கோட்டாபய

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாரென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இந்த வருடம்... Read more »

தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை வழங்குவேன் – பிரதமர் உறுதி

தமிழர்களை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்றும், தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை வழங்குவேன் என்றும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். நாட்டின் சமகால அரசியல் நிலமைகள் தொடர்பில், சர்வதேச ஊடகம் ஒன்றின் இலங்கைச் செய்தியாளருக்கு வழங்கிய நேர்காணலிலேயே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். இதன் போது... Read more »

பருத்தித்துறை பகுதியில் இளைஞர் படுகொலை

பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது, இளைஞர் ஒருவரை கோடாரியால் வெட்டிக்கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் வாசுதேவன் அமல்கரன்... Read more »