கொய்யாக்காய் என நினைத்து நச்சு விதையை உட்கொண்ட குடும்பஸ்தர் மரணம்!

யாழ். அராலியில் அதிகளவு மதுபானம் அருந்திய நிலையில் கொய்யாக்காய் என நினைத்து ஒருவகை நச்சு விதையை உட்கொண்ட குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த சனிக்கிழமை சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று குறித்த குடும்பஸ்தருக்கு அவரது பிள்ளைகளால் ஒரு... Read more »

எமது தாயாரின் தியாகத்தை அரசியல்வாதிகள் மதிக்கவேண்டும் : அன்னை பூபதியின் பிள்ளைகள்

“நாங்கள் எவரின் பின்புலனில் செயற்படவில்லை, தேசத்துக்காக உயிர் நீத்த எங்களது தாயாரையும் எம்மையும் அவமானப்படுத்துவதை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என அன்னைபூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார். அன்னை பூபதியின் நினைவு தின நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ள சர்ச்சைகள் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு... Read more »

முள்ளிவாய்கால் பேரவலத்தினை நினைவுகூர அழைப்பு!

இறுதிக்கட்டப்போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்காக எதிர்வரும் மே- 18 ஆம் திகதி அனைவரையும் ஒன்று திரளுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் நேற்று (புதன்கிழமை) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உலக சமூகங்களின் மனச்சாட்சிக் கதவுகளை... Read more »

வடக்கின் சட்டவிரோத கட்டடங்கள்: நல்லூர் சபையின் அதிரடி தீர்மானம்!

நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்படும் கட்டடங்கள் அனைத்தையும் அதன் ஆரம்பநிலையிலேயே இடித்து அழிப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் முதலாவது அமர்வு சபை சபா மண்டபத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதன்போது குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டு, சபை... Read more »

இலங்கைத் தமிழர்களை வைத்தே இந்தியாவில் அரசியல்: வடக்கு முதலமைச்சர்

இந்தியாவில் இலங்கைத் தமிழர்களை வைத்து அரசியல் செய்வது சாதாரணமானது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டையில் உள்ள அரச சித்த மருத்துவக் உள்ள அகத்தியர் கோயிலில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.... Read more »

யாழ். நகரை அழகுபடுத்த மத்திய அரசின் உதவியை பெற்றுக்கொடுக்கத் தயார்: ரெஜினோல்ட் குரே

யாழ். நகர அபிவிருத்திக்காக மத்திய அரசின் உதவிகளை பெற்றுக்கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், தேவையேற்படின் அதற்கான கோரிக்கையை முன்வைக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆனோல்ட்டை, யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) முற்பகல் இச்சந்திப்பு கலந்துரையாடியபோதே... Read more »

விக்னேஸ்வரனுடன் ஈபிஆர்எல்எவ் இணையுமா? – சுரேஷ் விளக்கம்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எவ்வாறு செயற்படப் போகிறார் என்பதை வைத்தே அவருடன் இணைவது குறித்து ஈபிஆர்எல்எவ் தீர்மானிக்கும் என்று அக் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிய கட்சி ஒன்றின் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு... Read more »

யாழ் மீனவருக்கு சிக்கிய ஒன்றரை கோடி பெறுமதியான மீன்கள்!

யாழ் .வடமராட்சி கடற்பரப்பில் கரை வலை தொழில் செய்த மீனவர் ஒருவருக்கு, சுமார் ஒன்றரை கோடி பெறுமதியான மீன்கள் சிக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பரப்பில் கரைவலை தொழில் செய்யும் மீனவருக்கே, நேற்று (செவ்வாய்க்கிழமை) 20 ஆயிரம் கிலோவிற்கும்... Read more »

ஆனந்தசுதாகரனை விடுவிக்க மூன்று லட்சம் மக்கள் கையொப்பமிட்ட மனு கையளிப்பு

தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனை விடுதலை செய்யக்கோரி வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரனிடம், ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் மனுவொன்றை கையளித்துள்ளனர். இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட கல்விச் சமூகத்திடம் சேகரிக்கப்பட்ட மூன்று லட்சம்... Read more »

வடமாகாண ஆளுநராக மீண்டும் றெஜினோல் கூரே பதவியேற்பு!

வடக்கு மாகாண ஆளுநராக மீளவும் நியமிக்கப்பட்டுள்ள றெஜினோல்ட் கூரே இன்றையதினம் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். மாகாண ஆளுநர்கள் மாற்றத்தின் போது வடக்கு மாகாண ஆளநராக இருந்த றெஜினொல்ட் கூரேயையும் ஐனாதிபதி மாற்றியிருந்தார். இந்நிலையில் மீளவும் வடக்கு ஆளுநராக றெஜினோல்ட் கூரே நியமிக்கப்பட... Read more »

மீள்குடியேறும் மக்களுக்கு வலி,வடக்கு பிரதேசசபை உதவி!

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ள பகுதி கிணறுகளை தூய்மைப்படுத்தும் பணிகளையும், பற்றைகளை துப்புரவு செய்து வீதிகளை அமைக்கும் பணிகளையும், மீள்குடியேறிவரும் மக்களுக்கான குடிநீர் வசதிகளையும் வலி,வடக்கு பிரதேச சபை செய்து வருவதாக பிரதேச சபையின் தலைவர் எஸ்.சுகிர்தன் கூறியுள்ளார். கடந்த 13ம்... Read more »

பேஸ்புக் நிர்வாகிக்கு இலங்கையைச் சேர்ந்த 12 சிவில் அமைப்புகள் பகிரங்க கடிதம்

இலங்கையில் மதங்களிற்கு இடையே குரோதங்களை பரப்புவதற்கு பேஸ்புக்கை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என 12 சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கையை சேர்ந்த 12 சிவில்அமைப்புகள் இது தொடர்பில் பேஸ்புக்கின் பிரதான நிர்வாகிக்கு பகிரங்க கடிதமொன்றை எழுதியுள்ளன. இலங்கையில் மதங்களிற்கு இடையே குரோதத்தினை... Read more »

அன்னை பூபதியின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுமா? புதிதாக உருவாகிய சர்ச்சை!

அன்னை பூபதியின் 30ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரின் பெயரை பயன்படுத்தி முன்னெடுக்கும் நிகழ்வுகளை தங்களது அனுமதியின்றி நடாத்தக்கூடாது என அன்னைபூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி மட்டு. பொலிஸ் நிலையததில் நேற்று (திங்கட்கிழமை) முறைப்பாடு செய்துள்ளார். தேசத்தின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த... Read more »

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தயார்! – சம்பந்தன்

ஒரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நினைப்பது அநாகரிகமான செயலென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அதனை எதிர்கொள்ள தயாராகவே இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.... Read more »

வலி. வடக்கில் அமைந்திருந்த இராணுவ களஞ்சியசாலை வெளியேற்றம்

வலி. வடக்கு – மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் பாரிய ஆயுதக் களஞ்சியசாலை அங்கிருந்து நேற்று (திங்கட்கிழமை) வெளியேற்றப்பட்டது. குறித்த பகுதியில் கடந்த 683 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்திற்காக வழங்கப்பட்டமையை தொடர்ந்து இந்த ஆயுதக் களஞ்சியசாலை மற்றும் அதனுடன் இணைந்த கட்டடங்கள் என்பன இராணுவத்தினரால்... Read more »

தொகுதிவாரி தேர்தல் முறை தவறானது – சுமந்திரன்

தொகுதிவாரி தேர்தல் முறை மிகவும் மோசமானது என்பதற்கு வவுனியா நகரசபையின் ஆட்சியதிகாரம் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணி வசமானமை மிகச் சிறந்த உதாரணம் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இந்த தேர்தல் முறையின்... Read more »

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக 68 மில்லியன் நிதி முதற்கட்டமான கிடைக்கப்பெற்றுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், “யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட... Read more »

சன்சீ கப்பலில் கனடா சென்ற யாழ் இளைஞன் வெட்டிக் கொலை

கனடா சென்ற யாழ்ப்பாண இளைஞன் உட்பட 8 பேர் அங்கு வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இந்த கொலைகள் இடம்பெற்ற போதும், தற்போது வெளிவந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களிடம் கனேடிய பொலிஸார் உறுதி செய்துள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள அவரது... Read more »

தலைவர் பிரபாகரனின் வீட்டில் நடிகர் சதீஸ்!

தென்னிந்திய திரைப்பட நடிகர் சதிஸ் யாழ்பாணத்திற்கு வருகைதந்துள்ளார். யாழ்ப்பணத்திற்கு வந்த அவர், வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டுக்கு சென்று அதனை பார்வையிட்டு உள்ளார். அது தொடர்பிலான ஒளிப்படத்தினை தனது கீச்சகத்தில் (டுவீட்டரில்) பதிவிட்டுள்ளார். Read more »

அரசாங்கத்தில் புத்தரும் இல்லை காந்தியும் இல்லை! – யாழில் அமைச்சர் மனோ

“அரசுடன் உடன்படிக்கை செய்வதில் நம்பிக்கையில்லை. காரணம் அந்த உடன்படிக்கைகளை நிறைவேற்ற அரசில் கௌதம புத்தர்களோ, மகாத்மா காந்திகளோ இல்லை. எல்லாம் அரசியல் பேரம்தான் நடக்கிறது” இவ்வாறு தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை)... Read more »