Ad Widget

ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைந்த விவேக்

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘அப்பாடக்கர்’. இப்படத்தை சுராஜ் இயக்குகிறார். திரிஷா, அஞ்சலி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்போது இந்த கூட்டணியில் காமெடி நடிகர் விவேக்கும் இணைந்துள்ளார். இதை ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்திற்கு பிறகு ‘அப்பாடக்கர்’...

இவரை கண்டால் உடன் தகவல் தரவும்

கீழுள்ள படத்தில் இருப்பவரை கண்டால் உடனடியாக பொலிஸூக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இணையத்தளங்களின் ஊடாக பெண்களை ஏமாற்றி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே இவர் தேடப்பட்டுவருகின்றார். குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பிலேயே இந்த சந்தேகநபரை கைதுசெய்துசெய்வதற்கு தேடிவருவதாக தெரிவித்துள்ள பொலிஸார், அதற்காக மக்களின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளனர். திஸாநாயக்க முதியன்செலாகே சுஜித் நிலந்த என்ற...
Ad Widget

வடக்கிலுள்ள 10 பிரதேச சபைகளுக்கு வாகனங்கள்

பிரதேச சபை தவிசாளர்களுக்கு வாகனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது. அதற்கு அதிதியாக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய கலந்து கொண்டிருந்தார். கூட்டத்தினை அடுத்து பிரதேச சபை தவிசாளர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன. குறித்த வாகனங்களை கரு...

இந்திய பிரதமர், ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரி

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு பிரதமர் நரேந்திரமோடியை இன்று திங்கட்கிழமை காலை சந்தித்தார். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு விசேட இராணுவ மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியை சந்தித்துள்ளார். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபாலவின் பாரியார், இந்திய ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

அவலோக்தேஸ்வர போதிசத்துவர் சிலை ஜனாதிபதியால் திறந்து வைப்பு

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவலோக்தேஸ்வர போதிசத்துவர் சிலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (15) பிற்பகல் திரை நீக்கம் செய்து வைத்தார். கி.மு 08ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த போதிசத்துவர் சிலை அனுராதபுர வேரகல பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்ட வெண்கலச் சிலையான இதன் பாதங்கள் லலிதாசன...

வடமாகாண விசேட ஒருங்கிணைப்பு கூட்டம்

வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று காலை யாழ்.பிரதான நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியது. வடக்கின் ஐந்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பிரதம விருந்தினராக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய, வடக்குமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், வடக்குமாகாண ஆளுநர், வடமாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரச அதிபர்கள்,...

ஆயுதங்களுடன் நின்ற நால்வர் கைது

கோண்டாவில் பகுதியில் வாள்கள், பொல்லுகள் மற்றும் கம்பிகளுடன் வீதியில் நின்றுகொண்டிருந்த நான்கு சந்தேகநபர்களை ஞாயிற்றுக்கிழமை (15) இரவு கைது செய்ததாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். சண்டையொன்றில் ஈடுபடும் நோக்குடன் வீதியில் நின்றிருந்த சந்தேகநபர்கள் தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்துக்கு சென்ற பொலிஸார் அவர்களை கைது செய்தனர். கோண்டாவில் பகுதியில் சனிக்கிழமை (14) மாலையில்...

மனோரமா அபாய கட்டத்தில் இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி

பழம்பெரும் நடிகை மனோரமா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. ஆனால், அது வெறும் வதந்தி என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி' என அன்போடு அழைக்கப்படும் நடிகை மனோரமா, இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ்த் திரையுலகம் தந்த...

மேற்கிந்திய தீவுகளை தோற்கடித்தது அயர்லாந்து!

உலக கிண்ண போட்டியின் 5வது லீக் ஆட்டம் நியூசிலாந்தில் உள்ள நெல்சன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியை வென்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதனையடுத்து, மேற்கிந்திய தீவுகள் அணி தனது துடுப்பாட்டத்தை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கெய்ல்...

விக்னேஸ்வரனின் இரட்டை வேடம்! சி.தவராசா

வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இனப்படுகொலை குறித்த தீர்மானம் பற்றி, வட மாகாண சபை எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா கருத்து வௌியிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, இலங்கை அரசின் இனப் படுகொலை தொடர்பாக அண்மையில் வட மாகாண சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணை ஜனாதிபதி சிறிசேனவிற்கோ அல்லது அவரின் அரசிற்கோ எதிரானதல்ல எனவும் முன்னைய அரசுகளையே, குறிப்பாக...

இடமாற்றம் வழங்கக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

வன்னி, மற்றும் தீவக வலய பாடசாலைகளில் பணியாற்றி தமது பணிக்காலம் முடிந்தும் இடமாற்றம் வழங்கப்படாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இன்று திங்கட்கிழமை காலை வடக்கு மாகாண கல்வி அமைச்சு செயலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நகைக்கடை உரிமையாளரை அச்சுறுத்தி பணத்தைப் பெற பொலிஸார் முயற்சி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழ்ப்பாணத்திலுள்ள நகைக் கடை உரிமையாளர் ஒருவரை அச்சுறுத்தி பெருந் தொகைப் பணத்தை பெற்றுக் கொள்ள பொலிஸார் முயற்சித்த சம்பவமொன்று யாழ் நகரில் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் யாழ் நகரின் கஸ் தூரியார் வீதியிலுள்ள நகைக் கடையொன்றின் உரிமையாளருக்கு கடந்த சில தினங்களாக இடம் பெற்று வருவதாக அக்கடையின் உரிமையாளர்...

நீதிமன்ற உத்தரவின்றி கல்லுண்டாய் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை நிறுத்த முடியாது

கல்லுண்டாய் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மாத்திரமே நிறுத்த முடியும். மக்கள் வேண்டுமென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் என யாழ்.மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் தெரிவித்தார். யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகள் கல்லுண்டாயில் கொட்டப்படுவதை நிறுத்தக்கோரி அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மக்களுடன் பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு...

வட மாகாண சபை உறுப்பினர் மேரி கமலா ராஜினாமா?

வட மாகாண சபை உறுப்பினர் மேரி கமலா குணசீலனின் இராஜினாமா கடிதம் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுழற்சி முறையில் வட மாகாண சபை உறுப்பினர் பதவி வகிப்பதாகக்கூறி, மேரி கமலா வட மாகாண சபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட தருணத்தில், ஒரு வருட காலத்தில்...

ஜனாதிபதி மைத்திரிக்கு டெல்லியில் மகத்தான வரவேற்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மாலை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகத்தான வரவேற்று அளிக்கப்பட்டது. இந்திய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா மற்றும் உயர் அதிகாரிகள் விமான நிலையத்தில்...

யாழில் மாணவி கடத்தல்

யாழ்.விக்டோரியா வீதியில் வைத்து மாணவியொருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, யாழ். விக்டோரியா வீதியால் வந்து கொண்டிருந்த போது குறித்த மாணவியை வானில் வந்தவர்கள் நேற்று காலை கடத்திச் சென்றுள்ளனர். பூநகரியை சேர்ந்த மாணவியே இவ்வாறு கடத்தப்பட்டவராவார். பூநகரியில் வசிக்கும் இவர், சனி, ஞாயிறு தினங்களில் அரியாலையிலுள்ள உறவினர் வீடொன்றில் தங்கியிருந்து...

இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் – ததேகூ

இலங்கையில் மீள்குடியேற்றம், நிலங்கள் விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்களில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சூழலிலேயே தமிழ்க் கூட்டமைப்பின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் வேளையில்,...

காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடிய மோகன்லால்!

உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் காதலர் தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. பலவிதமான காதலர் தின கொண்டாட்டங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் மலையால நடிகர் மோகன்லால் சற்று வித்தியாசமாக காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார். அவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று, அங்கு உள்ளவர்களுடன் நேரம் செலவழித்து கொண்டாடியுள்ளார். அதுபற்றி அவர் முகநூல்...

புற்று நோய் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் ஆசையை நிறைவேற்றிய விஜய்

நடிகர், நடிகைகள் படத்தில் நடித்து பணம் சம்பாதிப்பதோடு மட்டும் இல்லாமல், தங்கள் மனதுக்குப் பிடித்த நல்ல காரியங்களுக்கு செலவு செய்து தங்கள் ஈடுபாட்டை தெரிவித்து வருகிறார்கள். அப்படி பல நல்ல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி வரும் நடிகர்களில் விஜய்யும் ஒருவர். கஷ்டப்பட்டு வரும் ரசிகர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை விஜய் செய்து வருகிறார். தற்போது சென்னையில்...

சர்வதேச மத்தியஸ்தம் இல்லாத உள்நாட்டு விசாரணையை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது என்கிறார் சுமந்திரன்!

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மேற்கொண்ட விசாரணை அறிக்கையை எதிர்வரும் மார்ச் மாத அமர்வில் சமர்ப்பிக்காது பிற்போடக்கோரும் இலங்கை அரசு, அந்த அறிக்கையை வெளிவராமல் தடுத்து, உள்நாட்டு விசாரணையை முன்னெடுப்பதை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற...
Loading posts...

All posts loaded

No more posts