. Editor – Page 1392 – Jaffna Journal

வடக்கு மீனவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்: செல்வம் அடைக்கலநாதன்

வடக்கு மீனவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.கடலுக்கு செல்லும் அதே இடத்திலேயே மீள் திரும்ப வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் கடினமானதாகும். Read more »

உதயன், வலம்புரிக்கு எதிராக இராணுவ தளபதி வழக்கு

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகைகளுக்கு எதிராக தலா 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read more »

தீவகத் தளங்களைப் பலப்படுத்தும் முயற்சியில் கடற்படையும் இராணுவமும்

யாழ். வேலணை மண்கும்பான் கடற்கரையோரத்தில் பாரியதளம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்ற கடற்படையினர் தீவக் பகுதிகளிலுள்ள தளங்களைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். Read more »

புலிக்கொடியை பறக்க விட்டது யார் ? தேடுகின்றனர் பொலிஸார்

வல்வெட்டித்துறையில் புலிக்கொடி பறந்தமை தொடர்பில் எவரும் கைது செய்ய்படவில்லை புலனாய்வு விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்துள்ளார். Read more »

யாழின் சில பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும்

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த, தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்ற வேண்டியுள்ளதால், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு வேலைகளுக்காகவும் புதிய மின்மாற்றி நிறுவுவதற்காகவும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமைவரை மின்விநியோகம் தடைப்படும் என யாழ். மாவட்ட மின்பொறியியலாளர்... Read more »

வடக்கில் 6,519,761 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன

வடக்கில் இதுவரை 6, 519, 761 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக ஹலோறஸ்ட் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் தெரிவித்தது. Read more »

தீபமேற்றுவதற்கு தடை போட இராணுவத்திற்கு அதிகாரமில்லை: சிவாஜிலிங்கம்

இந்துக்களின் பாரம்பரிய பண்டிகை தீபத்திருநாள் அன்று தீபமேற்றுவதற்கு தடை விதிக்க இராணுவத்திற்கு அதிகாரமில்லை’ என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சிவாஜிலிங்கம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். Read more »

தீபத்திருநாளுக்கு தடையில்லை; யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா

27 ஆம் திகதி மக்கள் ஆலயங்களில் விசேட வழிபாடுகளை நடாத்தவும் மணி அடிப்பதற்கும் யாழ். மாவட்டத்தில் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்துள்ளார்.யாழ். பொலிஸ் தலைமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. இதன்... Read more »

வீதி புனரமைப்பு அபிவிருத்திப் பணிகள் உரிய முறையில் இடம்பெறவில்லை.: கவலை தெரிவிக்கிறார் அரச அதிபர்

யாழ்.நகரில் இடம்பெற்றுவரும் வீதிப் புனரமைப்புப் பணிகள் உரிய முறையில் திட்டமிட்டு செயற்படுத்தப்படவில்லை. வீதிப் புனரமைப்புப் பணிகள் இடம்பெறும்போது பொது மக்களின் போக்குவரத்துக் குறித்து மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டும். Read more »

மீளச் செலுத்த முடியும் என்றால் கடன் பெற்று தொழில் செய்யுங்கள்; நெல்லியடி வணிகர் கழகம் வர்த்தகர்களுக்கு அறிவுறுத்து

கடன்களைப் பெற்றுத் தொழில் செய்யும் போது கடனுக்கு உரிய வட்டியும் செலுத்தி இலாபமும் கிடைக்குமாயின் கடன்பெற்று தொழில் செய்யலாம். கடனைப்பெற்று அதற்குரிய வட்டியையும் முதலையும் செலுத்த முடியாது என்று தெரிந்தும் கடனைப் பெற்று விட்டு தலைமறைவாகுவது ஒட்டு மொத்த வர்த்தக சமூகத்துக்கே அவமானத்தை ஏற்படுத்தும்.... Read more »

வீதி புனரமைப்புக்கு 27 மில்லியன் ஒதுக்கீடு: நல்லூர் பிரதேச சபை தவிசாளர்

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட 56 வீதிகள் 27 மில்லியன் ரூபா நிதியில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.வசந்தகுமார் வியாழக்கிழமை தெரிவித்தார். Read more »

டெங்குநுளம்பு பரவும் சூழலை வைத்திருந்த 12 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

டெங்குநுளம்பு பரவக்கூடிய சூழலை வைத்திருந்தததாகக் கூறப்படும் 12 பேருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read more »

யாழ்ப்பாண ஆதீனம் அங்குரார்ப்பணம்

இலங்கையில் யாழ்ப்பாண ஆதீனம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆதீனம் நேற்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளதாகவும் இதன் நிர்வாகக் பொறுப்பாளராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஜெயரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் இந்தியாவின் பேரூர் ஆதீனம் இளையப்பட்டம் மருதாசல அடிகள் தெரிவித்துள்ளார். Read more »

கனடாவில் வசிக்கும் ஒருவருக்கு இந்திய வீட்டுத்திட்டத்தில் வீடு

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேசத்தில் உள்ள மாரீசன் கூடல் கிராம அலுவலர் பிரிவில் கனடாவில் வசிக்கும் ஒருவர், இந்திய வீட்டுத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இரட்டைக் குடியுரிமை உள்ள ஒருவருக்கே இவ்வாறு இந்திய வீட்டுத்திட்டத்தில் வீடு வழங்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். Read more »

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு அடையாள அட்டை அவசியம்; பரீட்சை ஆணையாளர்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டை வைத்திருப்பது அவசியமென பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார தெரிவித்தார். Read more »

வல்வெட்டித்துறைக் கடற்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்குள் முறுகல்

வல்வெட்டித்துறைக் கடற்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள சிறுதொழில் புரிவோருக்கும் பெரும் தொழிலில் ஈடுபடுவோருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. Read more »

‘அடிப்படை தகவல்களை வழங்கினால் ஆவணங்கள் வழங்க தயார்’

பிறப்பு மற்றும் இறப்பு அத்தாட்சி பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாதவர்கள் அடிப்படை தகவல்களை வழங்கினால் ஆவணங்கள் வழங்க பதிவாளர் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என வட மாகாண உதவி பதிவாளர் நாயகம் ஆனந்தி தெரிவித்தார். Read more »

பொன்னாலை பகுதியில் மக்களின் நிலத்தைக் கைப்பற்றி பாரிய படைமுகாம்

யாழ். பொன்னாலை உயர் பாதுகாப்பு வலயத்தினை நீக்குவது தொடர்பில் பொதுமக்களின் கடுமையான அழுத்தங்களின் அடிப்படையில் உயர்பாதுகாப்பு வலயத்தை அகற்றுவதென மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அப்பகுதியில் புதிய முகாம்கள் தொடர்ந்தும் அமைக்கப்பட்டு வருகின்றன. Read more »

சர்வதேச திரைப்பட விழா யாழ்ப்பாணத்தில்

யாழ்ப்பாணத்தில் ‘இணைந்து போதலின் சித்திரிப்புக்கள்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச திரைப்படவிழா இந்த முறை இடம்பெறவுள்ளது.சர்வதேச இனத்துவக் கற்கைகளுக்கான மையம் ஏற்பாடு செய்துள்ள இந்த சர்வதேச திரைப்பட விழாவில், 14 சர்வதேச மற்றும் உள்நாட்டு திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. Read more »

யாழ். நாவாந்துறை வீதி புனரமைப்பு

யாழ். நாவாந்துறை பகுதி வீதிகளுக்கு தார்ரிட்டு செப்பனிடும் பணி வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.புறநெகும ‘நெல்சிப்’ திட்டத்தின் கீழ் கிராமிய வீதிகள், வடிகால்கள் அபிவிருத்தி பணிகளின் கீழ் யாழ். மாநகர சபையினால் நாவாந்துறை கமால் வீதி, வைரவர் வீதி, மாவடி வீதி போன்ற வீதிகள் தார் இட்டு... Read more »