Ad Widget

வடமாகாண சபைக்குப் புதிய உறுப்பினர்

வடமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் வீரபாகு கனகசுந்தரசுவாமிக்கு பதிலாக புளொட் அமைப்பைச் சேர்ந்த கந்தையா சிவனேசன் வடமாகாண சபை உறுப்பினராக தேர்தல் ஆணையாளரால் நியமிக்கப்பட்டுள்ளார். மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர், கனகசுந்தரசுவாமி கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி இயற்கையெய்தினார். இவரது இடம் வடமாகாண சபையில் கடந்த மூன்று மாதகாலமாக வெற்றிடமாகவே இருந்து வந்தது....

மாணவன் மீது வாள்வெட்டு

மல்லாகம் சந்தி கே.கே.எஸ் வீதியால் சென்றுகொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவனை நேற்று சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், வாளால் வெட்டியதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். மல்லாகம் மகாவித்தியாலய உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் க.பிரசன்னா (வயது 19) என்ற மாணவன் தலையில் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை...
Ad Widget

மன்னார் ஆயரின் உடல் நிலை தேறிவருவதாக தெரிவிப்பு

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையின் உடல் நிலை தேறிவருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீர் சுகவீனமுற்ற நிலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை, நேற்று சனிக்கிழமை (02) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆயர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல்களை ஆயரின் செயலாளர் அருட்தந்தை முரளி அடிகளார்...

கூட்டமைப்பு – ஜோன் கெரி சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் இடையிலான சந்திப்பு, இன்று ஞாயிற்றுக்கிழமை(03) காலை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் இரா. சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம்...

நிரந்தர நியமனம் வழங்குங்கள் : உயர்தொழில்நுட்பக் கல்லூரி பட்டதாரிகள் போராட்டம்

உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்த பட்டதாரிகள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி இன்று நல்லூர் ஆலய சூழலில் போராட்டம் ஒன்றை நடத்தினர். கடந்த 2012 ஆம் ஆண்டு தமது நிரந்தர நியமனம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் 228 பட்டதாரிகள் ஒன்றிணைந்து வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2013...

அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் இன்று இலங்கை விஜயம்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரில் ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி இன்று (02) இலங்கை வரவுள்ளார். நாளைவரை (03) அவர் இலங்கையில் தங்கியிருப்பார். 1972 ஆம் ஆண்டு வில்லியம் பியர்ஸ் ரோஜஸின் விஜயத்திற்குப் பின்னர் அமெரிக்க இராச்சியத்தின் இராஜாங்கச் செயலாளர் ஒருவரினால் மேற்கொள்ளப்படவுள்ள முதலாவது உத்தியோகபூர்வ விஜயம்...

கூட்டுறவாளர்களின் மாபெரும் மேதினப் பேரணி யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த கூட்டுறவு அமைப்புகளும், கூட்டுறவுத் தொழிற்சங்கங்களும் இணைந்து யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமான முறையில் மேதினத்தைக் கொண்டாடியுள்ளன. பல்லாயிரக்கணக்கான கூட்டுறவாளர்கள் நேற்று (01.05.2015) பிற்பகல் 2மணிக்கு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு மாலை 3.30மணிக்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தை சென்றடைந்தனர். இப் மேதின எழுச்சிப் பேரணியை வடக்கு மாகாண முதலமைச்சர்...

கல்வி நியதிச்சட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

வடமாகாண கல்வி அமைச்சினால் உருவாக்கப்பட்ட கல்வி நியதிச் சட்டம் வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (30) நடைபெற்றபோது, கல்வி நியதிச் சட்டத்தின் 2ஆம் மற்றும் 3ஆம் வாசிப்பு சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவால் சமர்ப்பிக்கப்பட்ட கல்வி நியதிச் சட்டத்தின் முதலாம்...

வடக்கு, கிழக்கைச்சேர்ந்த இளைஞர் இருவர் கைது

வடக்கு மற்றும் கிழக்கைச்சேர்ந்த இளைஞர் இருவரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரகசிய பொலிஸார் கைது செய்துள்ளனர். போலியான கடவுச்சீட்டு மற்றும் விசா ஆகியவற்றை பயன்படுத்தி இத்தாலிக்கு செல்வதற்கு முயன்ற போதே அவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த 28 மற்றும் 31 வயதுகளுடைய இளைஞர் என்று தெரியவருகின்றது. அவ்விருவரும்...

இன்று உலகத்தின் நிலைத்திருப்பை உறுதிசெய்யும் தைரியம் மிக்கவர்களின் தினம்!

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இன்று தொழிலாளர்களின் தினமாகும். தனது வியர்வையைச் சிந்தி உழைத்து உலகத்தின் நிலைத்திருப்பை உறுதிசெய்யும் தைரியம் மிக்கவர்களின் தினமாகும். தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்கு கட்டுப்பாடு விதித்து அவற்றை நசுக்கியிருந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மேற்கொண்ட பாரிய சமூகப் போராட்டத்தின் இறுதியில் மக்களுக்கு சுதந்திரமாக...

பஸ் மீது கல் வீச்சு

யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் மீது மீசாலைச் சந்திக்கு அண்மையில் இனந்தெரியாத நபர்கள் புதன்கிழமை (29) இரவு கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினர். இந்தக் கல்வீச்சுத் தாக்குதலில் பஸ்ஸின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. பஸ்ஸில் பயணித்த பயணிகளை பிறிதொரு பஸ்ஸில் அனுப்பி வைத்த சாரதி, பஸ்ஸை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார்....

ஊடகவியலாளருக்கு பிணை

கொள்ளையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரை தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல யாழ். நீதவான் பொ.சிவகுமார் புதன்கிழமை (29) அனுமதி வழங்கினார். கொள்ளையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கடந்த 23ஆம் திகதி ஊடகவியலாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உட்பட நால்வர்...

வாள் வெட்டு கலாச்சாரம் தொடர்பில் வடக்கு மாகாண சபையில் விவாதம்

யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக தலைதூக்கியிருக்கும் வாள்வெட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு வடக்கு மாகாண சபை தீவிர நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளது. இன்று நடைபெற்று வரும் வடக்கு மாகாண சபையின் 28ஆவது மாதாந்த அமர்வில் அவைத்தலைவரால் குறித்த விடயம் சபைக்கு முன்வைக்கப்பட்டது. தற்போது அதிகரித்துள்ள வாள்வெட்டு கலாச்சாரத்தினால் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே வாள்வெட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்...

நேபாளத்தில் உயிரிழந்தவர்களுக்கும் ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களுக்கும் வடமாகாண சபையில் அஞ்சலி!

நேபாள பூகம்பத்தில் உயிரிழந்தவர்களுக்கும் செம்மரங்களைக் கடத்தினர் என்ற குற்றச்சாட்டில் ஆந்திராவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 21 தமிழர்களுக்கும் வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை காலை அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 28 ஆவது அமர்வு இன்று காலை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் கைதடியில் உள்ள பேரவை அலுவலகத்தில் ஆரம்பமானது. இந்த அமர்வின்...

இரண்டாவது நாளாகவும் தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம்

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அரச வேலைவாய்ப்பினை வழங்கக் கோரி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் அரச வேலையை வழங்க வேண்டும் என்றும் தமக்கு குறித்த பிரச்சினைக்குரிய தீர்வை எழுத்துருவில் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இன்றும் இரண்டாவது நாளாகவும்...

அதிகப்படியான வாக்குகள் நிரந்தரத் தீர்விற்காகவே – மைத்திரிக்கு சுட்டிக்காட்டினர் யாழ்.ஆயர்

வடக்கு-கிழக்கு மக்களின் அதிகப்படியான வாக்குகளால் நீங்கள் ஜனாதிபதியாகத் தெரிவானீர்கள். தமிழ் மக்கள் ஒரு நிரந்தர அரசியல் தீர்வை எதிர்பார்த் திருக்கிறார்கள். அதற்கான செயற்பாடுகளை நாங்கள் உங்களிடம் எதிர்பார்த்திருக்கின்றோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் வலியுறுத்தினார் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை. இவ்வாண்டுக்கான முதலாவது ஆயர் பேரவை கடந்த வாரம் கண்டியில் கூடியது. இதன் பின்னர்...

விடுவிக்கப்பட்ட பகுதியில் மீளக்குடியமர 825 குடும்பங்கள் பதிவு

கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு பகுதிகளின் 1,000 ஏக்கர் காணிகளில் மீளக்குடியமர்வதற்கு இதுவரையில் சுமார் 825 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன், புதன்கிழமை (29) தெரிவித்தார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர்...

மீண்டும் மீள்குடியேற்றம் தொடர்பான கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது

வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்குப் பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயமாக இருக்கும் பொதுமக்களின் காணிகளை மீள்குடியேற்றத்துக்கு விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டம், 2ஆவது தடவையாகவும் ஒத்திவைக்கட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி நடைபெறவிருந்த கூட்டம் பிற்பொடப்பட்டு இன்று புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தத. இந்நிலையில் நேற்றய கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டு எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதிக்கு பிற்பொடப்பட்டுள்ளது....

19ஆவது திருத்தச் சட்டம் இன்று முதல் அமுல்

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம், இன்று ஏப்ரல் 30ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் என்று தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, எனினும் இந்த திருத்தச் சட்டத்தின் முக்கிய மூன்று சரத்துக்கள், அடுத்து வரும் புதிய நாடாளுமன்றிலிருந்தே அமுலுக்கு வரும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள...

37 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கடந்த 3ஆம் திகதி கைது செய்யப்பட்ட 37 இந்திய மீனவர்களை, எதிர்வரும் மே 13ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, நேற்று புதன்கிழமை (29) உத்தரவிட்டார். தமிழக மாநிலத்தின் நாகப்பட்டினம், அக்கரைபேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சேர்ந்த 37 இந்திய...
Loading posts...

All posts loaded

No more posts