. Editor – Page 1342 – Jaffna Journal

திவிநெகும செயல் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு முருங்கைக் கன்றுகள் வழங்க நடவடிக்கை

திவிநெகும செயல் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு முருங்கைக் கன்றுகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. Read more »

கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் யாழ்.விஜயத்தை அரசாங்கம் தடுத்து நிறுத்தியது?

13வது திருத்தச் சட்ட விவகாரத்தில் அரசாங்கத்திற்கு எதிராக கருத்து கூறிவரும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, யாழ்ப்பாணத்திற்கு நேற்று மேற்கொள்ளவிருந்த விஜயம் திட்டமிட்ட வகையில் அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Read more »

பிரபா எம்பியுடன் கூட்டமைப்பு எம்பிக்கள் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது. Read more »

முன்னாள் புலி உறுப்பினர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

விடுதலைப் புலிகளின் மூத்த போராளியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more »

மதுபோதையில் நாயைக் கடித்த இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்கைக்காக அனுமதிப்பு

யாழ்ப்பாணம் திருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மதுபோதையில் தன்னைக் கடிக்க வந்த நாயைக் கடித்து குதறியதால் மயக்கமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more »

பாசையூர் இறங்குதுறை திறப்பு விழாவை புறக்கணித்தது அரசாங்கம்?

பாசையூர் இறங்குதுறை திறப்பு விழாவில் அரசாங்கம் சார்ப்பாக எவருமே கலந்துகொள்ளவில்லை. இந்த இறங்குதுறை திறப்பு விழாவினை யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்திருந்தது. Read more »

வடமாகாண ஆளுநர் சந்திரசிறிக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு ஏற்பு

பூநகரிக் கோட்டத்தைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள், வட மாகாண ஆளுநர் சந்திரசிறிக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை ஏற்று விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. Read more »

தமிழினி விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, இன்று விடுதலை செய்யப்பட்டார். Read more »

கேப்பாபிலவில் பெரும் இராணுவக் குடியிருப்பு; 2,000 ஏக்கர் காணியில் 4,000 குடும்பங்களை குடியேற்றத் திட்டம்

முல்லைத்தீவு, கேப்பாபிலவில் 4 ஆயிரம் இராணுவக் குடும்பங்களைக் குடியமர்த்துவதற்காக 2 ஆயிரத்து 26 ஏக்கர் காணியைச் சுவீகரிப்பதற்கு இலங்கை இராணுவம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. Read more »

முக்கிய சந்திப்பு…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. Read more »

பரீட்சைக்கு முன் கருத்தரங்குக்கு தடை

பொது பரீட்சைகள் நடைபெறுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னரும் அந்த பரீட்சைகள் நிறைவடையும் வரையிலும் கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. Read more »

வடக்கு மாகாணசைபத் தேர்தல்:ஈ.பி.டி.பி., சுதந்திரக் கட்சி இணைந்து போட்டி?

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.) என்பன இணைந்து போட்டியிடும் என்று, சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். Read more »

யாழில் அரச பொருட்களை விற்க சென்ற மூவர் கைது

அரசிற்கு சொந்தமான பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ய கொண்டு சென்ற மூவர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். Read more »

யாழில் கலாசார சீரழிவை ஏற்படுத்துபவர்கள் தொடர்பில் முறையிட பொலிஸ் நிலையத்தில் தனியான பிரிவு

யாழில் கலாசார சீரழிவை ஏற்படுத்துபவர்கள் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடுவதற்கு என தனியான பிரிவு ஒன்று விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரி சமன்சிகேரா தெரிவித்துள்ளார். Read more »

வலி. கிழக்குப் பிரதேசசபை ஊழியர்கள் சொல்லொணாத் துயரில்! அரச அதிகாரிகள் வேடிக்கை!

வலி. கிழக்குப் பிரதேசசபை ஊழியர்கள் 18 க்கும் அதிகமானோர் கடந்த 7 மாதங்களாக எவ்வித கொடுப்பனவுகளும் இன்றி பணியாற்றி வருவதாக தெரியவருகிறது. Read more »

யாழில் இளம் குடும்பப் பெண் தீ மூட்டி தற்கொலை

கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து தன்னைத்தானே மண்எண்ணை ஊற்றி தீ மூட்டிய இளம் குடும்பப் பெண் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more »

கைதடி சிறுவர் இல்லத்தில் தப்பியோடிய சிறுமிகளில் ஒருவர் களனியில் மீட்பு

யாழ்ப்பாணம் கைதடி சிறுவர் இல்லத்திலிருந்து தப்பியோடிய மூன்று சிறுமிகளில் ஒருவர் களனியில் வீடொன்றில் வேலைக்காரியாக இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். Read more »

கந்தரோடையில் மூவாயிரம் ஆண்டுகள் பழைமையான அம்மிக் கல் கண்டுபிடிப்பு

யாழ் கந்­த­ரோடைப் பகு­தியில் இருந்து சுமார் மூவா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்ட அம்மிக்கல் ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ளது. Read more »

கிராம அலுவலரின் ஆவணங்கள் அழிப்பு; சந்தேகநபர்கள் தலைமறைவு

வழக்கிற்கு செல்லாத நபர்களை கிராம அலுவலர் வழக்கிற்கு செல்லுமாறு கூறுவதற்கு அழைத்தமைக்காக கிராம சேவையாளரின் ஆவணங்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் நேற்று புங்குடுதீவில் நடைபெற்றுள்ளது. Read more »

கோபுர திருத்தப் பணியில் ஈடுபட்ட மூவர் விழுந்து படுகாயம்

மாதகல், நுணசை முருகன் ஆலய கோபுர திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த மூவர் விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more »