Ad Widget

கொக்கிளாய் தனியார் காணியில் சட்டவிரோதமான விகாரை உருப்பெறுகிறது

முல்லைத்தீவு கொக்கிளாயில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்ட விரோதமான முறையில் விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது. பொது மக்களின் தகவலையடுத்து நேற்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதை நேரில் உறுதிப்படுத்தியுள்ளார். முல்லைத்தீவு கொக்கிளாய் வைத்தியசாலைக் காணியின் ஒரு பகுதியையும் இதமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளையும் பாதை ஒன்றையும் அபகரித்து...

தகுதியில்லாதவர்கள் அரசியல் செல்வாக்குடன் பணியாற்றுகின்றனர் – முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன்

கடந்த காலங்களில் உரிய பதவிகளுக்கான தகுதிகளை கொண்டிராத பலர் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமனங்களை பெற்றுக்கொண்டார்கள். பல பதவிகளில் உரிய கல்வித்தகைமைகளை கொண்டிராத பலர் கடமையாற்றுகின்றார்கள் என்பதை நாம் 2013ஆம் ஆண்டு வடமாகாண சபை ஆட்சிக்க வந்த பின்னர் அறியக்கூடியதாகவுள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண உள்ளூராட்சி சபைகளில் தற்காலிக ஊழியர்களாக...
Ad Widget

வித்தியாவின் மரணத்துக்கு ராஜபக்‌ஷ குடும்பமே பொறுப்பு!

"வடக்கில் சமூகச் சீரழிவுகளை ஏற்படுத்தி இன்று அது விஸ்வரூபமாகி புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல், பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யும் நிலை ஏற்படுவதற்கான பொறுப்பை மஹிந்த ராஜபக்‌ஷவே ஏற்றுக்கொள்ள வேண்டும்'' - எனக் குற்றஞ்சாட்டும் ஜனநாயக மக்கள் முன்னணியின் உப பொதுச்செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சண்.குகவரதன், 'வடக்கின் வசந்தம்' என்ற பெயரில் ராஜபக்‌ஷ குடும்பம்...

உலக புகையிலை எதிர்ப்பு தினம் யாழில்!

உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் விஞ்ஞான சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண சுகாதார சுதேசிய அமைச்சர் எஸ் சத்தியலிங்கமும் சிறப்பு விருந்தினாகளாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத் துறையின் முன்னாள் தலைவர் வைத்தியகலாநிதி என்.சிவராசா, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பொது...

வித்தியா படுகொலை; கல்முனை மாநகர சபையில் கண்டன பிரேரணை நிறைவேற்றம்

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கல்முனை மாநகர சபையில், கண்டனம் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று புதன்கிழமை மாலை முதல்வர் நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றபோது, மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.அமிர்தலிங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இந்த கண்டனப் பிரேரணை, அனைத்து உறுப்பினர்களினதும் முழுமையான ஆதரவுடன் ஏகமனதாக...

குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற ஆணையாளராக கனகா நியமனம்

யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற ஆணையாளராக திருமதி கனகா சிவபாதசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம் நீதிச் சேவை ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ளது. இவர் முன்னர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற ஆணையாளராகக் கடமையாற்றியவர். பருத்தித்துறையைச் சேர்ந்த இவர், பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி...

இராணுவ பஸ் மோதி இளைஞன் காயம்

யாழ். சுன்னாகம் பகுதியில் புதன்கிழமை (27) இரவு இராணுவ பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகிய தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞனை பின்னால் சென்ற இராணுவ பஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்குச் சென்று விபத்துக்குள்ளான இரு வாகனங்களையும்...

கிளி. சிறுமி மீதான வன்கொடுமை : சந்தேகத்தில் 15 வயதுச் சிறுவன் கைது!!

பரந்தனில் ஏழு வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட விடயத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 15 வயது சிறுவன் கைதாகியுள்ளான். கிளிநொச்சி பொலிசார் நேற்று சிறுவனை கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. நேற்று பரந்தன் சிவபுரம் பகுதியில் ஏழு வயதான பாடசாலை சிறுமி கடத்தப்பட்டு, வாய் கட்டப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருந்தார். மயக்கமடைந்த மாணவியை...

தேர்தல் நடத்தத் தயார்! ஆனால் அரசிடமிருந்து அறிவிப்பு இல்லை!!

அரசு அறிவிப்பு விடுத்தால் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் திணைக்களம் எப்போதும் தயாராகவே உள்ளது எனத் தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய, அரசிடமிருந்து அதற்கான அறிவிப்பு இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறினார். அத்துடன், 20ஆவது திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டாலும், தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதைக் கூறமுடியாது என்று தெரிவித்த...

நாட்டில் வேகமாக அதிகரிக்கிறது ‘எய்ட்ஸ்’!

2015 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மாத்திரம் நாட்டின் சகல பகுதிகளிலும் 58 புதிய 'எய்ட்ஸ்' நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குநர் டாக்டர் சிசிர லியனகே எச்சரிக்கை விடுத்துள்ளார். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்தப் புள்ளி விவரங்கள் கிடைக்கப்பெற்றன எனவும் அவர் தெரிவித்தார். 1989 ஆம்...

பரந்தன் சிறுமி வன்புணர்வு; கண்டித்து இன்று போராட்டம்

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 6வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து ஊர் மக்களும் பாடசாலை மாணவர்களும் இன்று கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். புங்குடுதீவு சிறுமி வித்தியா வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சோகம் ஆறுவதற்கு முன்னர் பரந்தன் - சிவபுரத்தில் மற்றுமொரு சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாள். கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என ஏற்கனவே...

தமிழ் இளைஞர் , யுவதிகளே பொலிஸ் சேவையில் இணையுங்கள்; கோருகின்றார் வடக்கு டிஜஜி

வடக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையினை நீக்கும் பொருட்டு பொலிஸ் திணைக்களத்தினால் ஆட்சேர்ப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ . ஜயசிங்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கு மாகாணத்தில் தமிழ் பொலிஸ் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதனால் பொலிஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் பெரும்...

20ம் திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி!

தேர்தல் முறை மாற்றம் தொடர்பான 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தங்களுடன் அமைச்சரவையில் சட்டமூலத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை நேற்று மாலை கூடியது. அதன்போது ஜனாதிபதி 20ம் திருத்தம் குறித்த அமைச்சரவை பத்திரத்தை சமர்பித்துள்ளார். இதன்போது இந்த திருத்தம் மூலம் சிறு கட்சிகளுக்கு...

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் பெருமையுடன் வழங்கும் மலைத்தென்றல் – 2015!

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் பெருமையுடன் நடாத்தும் தமிழர்களின் கலை கலாசார பண்பாட்டு பாரம்பரியங்களையும் சிறப்புக்களையும் வெளிக்காட்டும் மலைத் தென்றல் நிகழ்வு இவ் வருடமும் மிகவும் பிரமாண்டமான முறையில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (30.05.2015) பிற்பகல் 01.30 மணி முதல் மாலை 06.30 மணி வரை ஊவா மாகாண நூலக...

யாழ். மேல்நீதிமன்ற நீதிபதியாக எம்.இளஞ்செழியன் நியமனம்

யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதியாக குற்றவியல் வழக்குகள் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு வழக்குகளுக்கான மாகாணம் மற்றும் மாகாண மேல்நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி எம்.இளஞ்செழியன், பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவனால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், சுண்டுக்குழி பாடசாலை மாணவி கிருஷாந்தி கொலை வழக்கில் முன்வைக்கப்பட்ட தகவலின்...

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், வடக்கு முதல்வர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

யாழ் குடாநாட்டில் முன்னெடுக்கப்படவிருக்கும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை (27.05.2015) யாழ் பொதுநூலக வளாகத்தில் அமைந்துள்ள வடமாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது. இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ் குடாநாட்டுக்குத் தண்ணீரை விநியோகிப்பதில் எழக்கூடிய பல்வேறு பிரச்சினைகளையும் கருத்திற் கொண்டு, வடமாகாணசபை குடாநாட்டுக்கான குடிநீர்த்தேவையைப் பூர்த்தி...

‘போர்க்களத்தில் ஒரு பூ’வுக்கு தடை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி அறிவிப்பாளரான இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள 'போர்க்களத்தில் ஒரு பூ' என்ற திரைப்படத்துக்கு இந்திய மத்திய திரைப்படக்குழு, சான்றிதழ் வழங்க மறுத்துள்ளது. 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட மோதல்களின் போது இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இசைப்பிரியாவை மையப்படுத்தி, இயக்குநர் கே.கணேசன் என்பவரால் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது....

சிறுபராய திருமணங்களுக்கு முற்றுப்புள்ளி?

நாட்டில் அதிகரித்து வரும் சிறுவயது திருமணங்களையும் சிறுவர் துஸ்பிரயோகங்களையும் கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி ரோஸி சேனாநாயக்கா தெரிவித்தார். வடக்கில் இடம்பெறும் சிறுவர் வன்புணர்வுகள் மற்றும் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'சிறுவயது திருமணங்கள் நாட்டில்...

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு நோட்டீஸ்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவை நிதி குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு தங்காலை பொலிஸாரினால் சற்றுமுன்னர் நோட்டீஸ் கையளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடமே இந்த நோட்டீஸ் கையளிக்கப்பட்டுள்ளது.

கடல் தீர்த்தத்தில் எரியும் விளக்கு: காண காட்டா விநாயகர் ஆலயத்தில் பக்தர் கூட்டம்!

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த விசாகப் பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை சிலாவத்தை, தீர்த்தக்கரைக் கடலில் கடல் நீரில் தீர்த்தம் எடுத்துவரப்பட்டு முள்ளியவளை, காட்டா விநாயகர் ஆலயத்தில் அம்மன் மண்டபத்தில் விளக்கேற்றப்பட்டுள்ளது. இந்த அற்புத நிகழ்வை பெருமளவான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசித்து வருகின்றனர்.
Loading posts...

All posts loaded

No more posts