Ad Widget

வித்தியா கொலைச் சந்தேகநபர்களுக்கு 15ஆம் திகதி வரை விளக்கமறியல்!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் 9 பேரையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் லெனின்குமார் உத்தரவிட்டார். சந்தேகநபர்கள் 9 பேரும் இன்று திங்கட்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார். வித்தியா குடும்பத்தினர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா உள்ளிட்ட 6 சட்டத்தரணிகள்...

2 வாரங்களில் 10 வன்புணர்வு; உடனடி விசாரணைக்கு கோருகிறார் கல்வி இராஜாங்க அமைச்சர்

வடக்கு மாகாணத்தில் கடந்த 14 நாள்களுக்குள் பாடசாலை மாணவிகள் மீது 10 வன்புணர்வு சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதிர்ச்சித் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார் கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணன் . இதில் சில வன்புணர்வு சம்பவங்கள் வெளியாட்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகின்ற போதிலும் இதில் சில பாடசாலை ஆசிரியர்களும் ஈடுபட்டுள்ளமை கவலையளிப்பதாக அமைச்சர்...
Ad Widget

பெண்களுடன் சேஷ்டை செய்பவர்களைக் கைது செய்ய நீதவான் உத்தரவு

பருத்தித்துறை நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெண் பிள்ளைகளிடம் சேஷ்டை செய்வோரைக் கைது செய்யுமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா உத்தரவுட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஞாயிற்றுக்கிழமை (31) கூறினார். புங்குடுதீவு மாணவி பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பெண் பிள்ளைகளுக்கு அவ்வாறான சம்பவம் இனிமேல் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதை...

தேனிலவில் மாயமான மணமகன்

தேனிலவுக்காக சென்ற ஜோடியில், மணமகன் அதுவும் நள்ளிரவு 12 மணியுடன் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தெல்தோட்ட பிரதேசத்தில் உள்ள விடுதியில் தேனிலவை கழிப்பதற்கு சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மணமகனான தெல்தோட்ட ரெலிமங்கொடயில் வசிக்கும் 33 வயதான ஜி.தர்மசேன என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்....

சாவகச்சேரியில் மூதாட்டியின் சடலம் மீட்பு!

சாவகச்சேரி பகுதியில் மூதாட்டி ஒருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி புகையிரத நிலைய வீதியில் தனித்து வசித்து வரும் நாகேஸ்வரி மகாதேவா (வயது 73) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். சம்பவம் பற்றித் தெரியவருவதாவது:- வீட்டின் வாசல் கதவு திறக்கப்பட்டிருந்தும் வீட்டு படலை பூட்டப்பட்டிருந்த நிலையில் ஆள்நடமாட்டம் இல்லாததால் அயலவர்கள் தொலைபேசி மூலம்...

கிளிநொச்சியில் காணாமற்போன மாணவி வவுனியா பஸ் நிலையத்தில்!

கிளிநொச்சி நகரில் கடந்த வியாழக்கிழமை காணாமற்போன மாணவி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வவுனியா பஸ் நிலையத்தில் காத்திருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு நீதிவானின் உத்தரவுக்கமைய சிறுவர் இல்லம் ஒன்றில் சேர்த்தனர். கிளிநொச்சி நகரில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் பணிபுரியும் தனது தாயாரை சந்திக்கச்சென்ற மாணவியை கடந்த வியாழக்கிழமை முதல் காணவில்லை என்று பெற்றோர் கிளிநொச்சி...

வித்தியா கொலை சந்தேகநபர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படுவதால் இராணுவம், பொலிஸார் குவிப்பு!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சந்தேகநபர்கள் 9 பேரும் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். இதையடுத்து ஊர்காவற்றுறை விசேட அதிரடிப் படையினர், கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு கடும் பாதுகாப்புக் கெடுபிடிகளும் போடப்பட்டுள்ளன. அத்துடன் விசேடமாக அனுராதபுரத்தில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனமும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்துக்கு அண்மையாக நிறுத்தப்பட்டுள்ளது. தவிர ஊர்காவற்றுறையில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளுக்கு தடை...

வற்றாப்பளை ஆலய உற்சவத்தை முன்னிட்டு விசேட பஸ் சேவை!

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழாவினை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபை வடபிராந்தியத்திலுள்ள யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு , ஆகிய ஏழு சாலைகளிலும் விசேட பஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்தியம் அறிவித்துள்ளது. பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறை காரைநகர் ஆகிய பகுதிகளிலிருந்து...

இன்று உலக பெற்றோர்கள் தினம்

இன்று உலக பெற்றோர்கள் தினமாகும். 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐநா பொதுக்கூட்டத்தில் பிரகடனம் A/RES/66/292 அமைய உலக பெற்றோர்களை கௌரவப்படுத்தும் நோக்கில் இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. இத்தினம் உலக பெற்றோர்களின் மகத்தான சேவையை பிள்ளைகள் பாராட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக அமைவதுடன் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தவும் ஒரு சந்தர்ப்பமாக அமைகிறது. பெற்றோர்- பிள்ளைகள்- நாட்டின் பிரதிநிதிகள்-...

காரைநகர் – ஊர்காவற்றுறை கடல் மார்க்க போக்குவரத்து விரைவில் மீள ஆரம்பம்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சியின் பயனாக காரைநகருக்கும், ஊர்காவற்றுறைக்கும் இடையிலான கடல்மார்க்க ´பாதை´ ஊடான சேவை அடுத்த மாதம் தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த இரு மாதங்களாக கேபிள் இல்லாத நிலையிலும், பாதை பழுதடைந்திருந்த நிலையிலும் இரு இடங்களுக்குமான கடல்மார்க்க சேவைகள் தொடர முடியாத நிலை இருந்து...

மக்களால் மட்டுமே என்னை பதவி நீக்க முடியும் – ரணில்

மக்களால் மாத்திரமே பிரதமர் பதவியிலிருந்து தன்னை நீக்க முடியும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 08ம் திகதி கிடைத்த மக்கள் உத்தரவு தான் பிரதமராவதற்கு கிடைத்த மக்கள் உத்தரவு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் யார்...

சம்பூரில் மீளக்குடியேறிய மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் காணிகளுக்குள் காணிச் சொந்தக்காரர்கள் நுழைவதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று சனிக்கிழமை காணிகளை துப்பரவு செய்த, தற்காலிக கொட்டகைகள் அமைத்து தங்கியிருந்த பலரை பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். குறித்த காணிகள் தொடர்பான வழக்கொன்று உயர் நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் இருப்பதே இதற்கு காரணம் என...

துஷ்பிரயோக வதந்தி பரப்பிய இருவருக்கு எதிராக முறைப்பாடு

அச்சுவேலி வடக்கு பகுதியில் பாடசாலை செல்லும் பதின்மூன்று வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டதாக கட்டுக்கதை பரப்பிய இருவருக்கு எதிராக சிறுமியின் பெற்றோர், வெள்ளிக்கிழமை (29) முறைப்பாடு செய்துள்ளனர் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலைக்கு செல்லும் தனது மகளை மீன் வியாபாரி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வருவதாக அவ் இருவரும் ஊருக்குள் கதை...

வன்முறையில் ஈடுபட்ட மேலும் நால்வர் கைது

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட சந்தேகத்தில் மேலும் நால்வரை சனிக்கிழமை (30) கைது செய்துள்ளதாக யாழ்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். கைதான நால்வரும் ஓட்டுமடப்பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இதன்போது வர்த்தக நிலைய உரிமையாளர்களை அச்சுறுத்தியமை, வங்கிகளுக்குள் புகுந்து அதன் செயற்பாடுகளுக்கு பங்கம்...

கிளிநொச்சி மாணவியை காணவில்லை

கிளிநொச்சி, ஊற்றுப்புலம் பகுதியைச் சேர்ந்த மணியம் விதுசா (வயது 16) என்ற மாணவியை கடந்த 28ஆம் திகதி முதல் காணவில்லை என மாணவியின் பெற்றோர், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை (30) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். ஊற்றுப்புலத்திலுள்ள தனது வீட்டிலிருந்து கடந்த 28ஆம் திகதி கிளிநொச்சி நகரிலுள்ள தனது தாயார் பணி செய்யும் சிறுவர் இல்லத்துக்கு...

இலவச சிங்கள மொழிப்பயிற்சி வகுப்புக்கள்

தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அனுசரணையுடன் ஐக்கிய மொழிச்சங்கம் நடாத்தும் இலவச சிங்களமொழிப் பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன என வடமராட்சி சுருக்கெழுத்து கழகத்தின் தலைவர் வ.சிவச்சந்திரதேவர் தெரிவித்தார். இப்பயிற்சி வகுப்புக்கள் எதிர்வரும் 04 ஆம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் பி.ப 3:00- 5:00 வரை வதிரி கரவெட்டியில் அமைந்துள்ள...

இளைஞன் மீது வாள்வெட்டு

நாரந்தனை தெற்கு, ஊர்காவற்துறை பகுதியில் உள்ள வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை (29) இரவு அத்துமீறி நுழைந்த குழு, இளைஞன் மீது வாள்வெட்டினை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் எஸ்.சசிகரன் என்பவர் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டியில் வந்த மூன்று பேர் கொண்ட குழு, இத் தாக்குதலை...

ஓடிக்கொண்டிருந்த டிராக்டரை விட்டுக் கழன்ற பவுஸர்

வீதியால் சென்று கொண்டிருந்த யாழ். மாநகரசபைக்குச் சொந்தமான குடிதண்ணீர் பெளஸர் ஒன்று திடீரென்று டிராக்டரை விட்டுக் கழன்று தடம்புரண்டது. ஏ9 வீதியில் பஸ்ரியன் சந்திக்கு அருகில் இன்று சனிக்கிழமை காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது. பெளஸர் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் வீதியால் சென்ற வயோதிபர் ஒருவர் காயமடைந்தார். அத்துடன் அருகில் இருந்த வர்த்தக நிலையத்தின் பொருள்கள் சிலவும்...

கிணற்றிலிருந்து சிறுமியின் சடலம் மீட்பு

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்;குட்பட்ட கிராமமான 2ஆம் கட்டை கோரக்கன்கட்டு என்னுமிடத்தில் வசிக்கும் சிறுமியாருவர், வெள்ளிக்கிழமை (29) மாலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கோரக்கன்கட்டு குடியிருப்பு என்னுமிடத்தில் வசிக்கும் இராசையா கமலேஸ்வரி (வயது 13) எனும் சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி காலையிலிருந்து காணாமற்போயிருந்த நிலையில், அவரின்...

யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபராக செந்தில் நந்தனன் நியமிக்கப்படவுள்ளார்

யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் ரூபினி வரதலிங்கம் பதவி உயர்வால் வடமாகாண பொதுநிர்வாக ஆணைக்குழுவுக்கு மாற்றமாகி செல்லவுள்ளார். அதன்படி யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபராக கடமையாற்றி வந்த ரூபினி வரதலிங்கத்தின் இடத்திற்கு புதிதாக நல்லூர் பிரதேச செயலர் செந்தில் நந்தனன் நியமிக்கப்படவுள்ளார். இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை புதிதாக யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபராக நல்லூர் பிரதேச...
Loading posts...

All posts loaded

No more posts