Ad Widget

சாரதி பயிற்சி நிறுவனத்தின் வாகனம் மோதி முதியவர் சாவு!

சாவகச்சேரிப் பகுதியில் வீதியைக் கடக்க முற்பட்ட முதியவரை வாகனம் மோதியதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சாகவகச்சேரி ஏ9 வீதியில் வீதியைக் கடக்கமுற்பட்ட முதியவரை தனியார் சாரதி பயிற்சி நிறுவனத்தின் வாகனம் மோதியதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். சரசாலை வடக்கைச் சேர்ந்த ஏ.நல்லதம்பி...

சமூக விரோதக் குற்றச் செயல்களுக்கு பிணை கிடையாது – நீதிபதி இளஞ்செழியன்

சமூகவிரோதக் குற்றச் செயல்களுக்காக யாழ்ப்பாணம் பகுதியில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் பிணை கோரி செய்யப்படுகின்ற விண்ணப்பங்களுக்கு, இலகுவில் பிணை வழங்கப்படமாட்டாது என்றும், சிலவேளை, அறவே பிணை கிடைக்காது என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்றில் பகிரங்கமாக அறிவித்துள்ளார். சமூகவிரோதக் குற்றச்செயலுடன் சம்பந்தப்பட்ட வழக்கொன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான...
Ad Widget

பதிவுத் தபால் விநியோகம் பாதிப்பு

மத்திய தபால் பரிமாற்றத்தில் பெருமளவிலான பதிவு தபால்கள் குவிந்து கிடப்பதனால் பதிவுத் தபால் விநியோக நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பரீட்சைகள், நேர்முகத் தேர்வுகள் முக்கிய நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்கள், மற்றும் பல்வேறு நிறுவனங்கள் ஊடாக அனுப்பிவைக்கப்படுகின்ற பதிவு தபால்கள் உரிய நேரத்தில் கிடைக்காமையால் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த இவ்...

பொலிஸாருக்கு வதிவிட செயலமர்வு

வடமாகாணத்தில் கடமையாற்றும் தமிழ், சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான, பெருங்குற்றம் மற்றும் சிறுகுற்றம் தொடர்பான மேலதிக வதிவிடப்பயிற்சி நெறி காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய பயிற்சி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (16) முதல் நடைபெற்று வருவதாக காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு நடைபெற்றுவருகின்றமை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பொலிஸ்...

பொதுத்தேர்தலுக்குப் பின் எரிபொருள் விலை உயரும்! – பந்துல

பொதுத்தேர்தலின் பின்னர் நிச்சயமாக எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்படும் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் கட்டாயமாக எரிபொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். தற்போது, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஒரு லீற்றர் பெற்றோல் விற்பனையின் மூலம் 30 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது....

வித்தியா படுகொலை சந்தேகநபர்களிடம் எதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை?

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை வெறுமனே படுகொலையாகவோ, வன்புணர்வு நிகழ்வாகவோ எடுக்க முடியாது. வித்தியா படுகொலை செய்யப்பட்ட பின்னர், அவரது சடலம் இருந்த கோலம், இது வெறும் வன்புணர்வு, படுகொலை என்பதைக் காட்டி நிற்கவில்லை. எனவே, இவ்வழக்கில் உண்மை நிலை என்னவென்று கண்டறியப்பட வேண்டும். அதற்கு சந்தேக நபர்கள் உரிய முறையில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட...

கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் வீட்டுக்கிணறு ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலத்தை கிளிநொச்சிப் பொலிஸார் மீட்டுள்ளனர். நேற்று பிற்பகல் குறித்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவர் அம்பாள்குளத்தைச் சேர்ந்த மரியதாஸ் உசாராணி (வயது 36 ) என்பவராவார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த பெண் மனநலம் குன்றியவராவார். தனது சகோதரியுடனேயே வசித்து வருகின்றார். நேற்றயதினம் சகோதரி கடைக்குச்...

இளைஞர்களைத் தாக்கிய சந்கேநபர்கள் கைது!

வறுத்தலைவிளான் பகுதிக்கு வேலைக்கு சென்ற இளைஞர்கள் மூவர் மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர் குழுவினால் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இருவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று திங்கள்கிழமை நள்ளிரவு குறிப்பிட்ட இருவரையும் கைது செய்த சுன்னாகம் பொலிஸார் அவர்களைதெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இளைஞர்கள் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட இடம் தெல்லிப்பழை பொலிஸ்...

இலங்கையையும் இந்தியாவையும் தரைவழியாக இணைக்க ரூ. 58 ஆயிரம் கோடியில் திட்டம்!!

இலங்கையையும் இந்தியாவையும் தரை வழியாக இணைக்கும் திட்டத்தை இரு நாடுகளும் இணைந்து செயற்படுத்த விரும்புகின்றன என இந்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் இந்தியா நேற்று மோட்டார் வாகனங்களுக்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது.இதன்போதே மேற்கண்ட விடயத்தை நிதின்கட்காரி கூறினார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன்...

எமது விடுதலைக்காக இன, மத பேதங்களைக் கடந்து பற்றுறுதியுடன் செயற்படுங்கள்! – தமிழ் அரசியல் கைதிகள் வேண்டுகோள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் ஏதாவது நன்மை விளையலாம் என்ற எதிர்பார்ப்புடன் இந்தச் சந்தர்ப்பத்தை நோக்குவதால், எமது விடுதலைக்காக இன, மத பேதங்களைக் கடந்து நீதி, நியாயம் வேண்டி அனைத்துத் தரப்பினரும் மனிதநேயத்துடன் தொடர்ந்தும் பற்றுறுதியுடன் செயற்படவேண்டும்' - என்று அனைத்து இலங்கைத் தமிழ் அரசியல் கைதிகள் அமைப்பு, அறிக்கையொன்றினூடாக வேண்டுகோள் விடுத்துள்ளது. தமது விடுதலை...

நாடாளுமன்றம் விரைவில் கலைப்பு; தேர்தலை எதிர்கொள்ள ஓரணியில் திரளுங்கள்! – ஜனாதிபதி

நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், அதை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஓரணியில் திரளவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். வெவ்வேறு திசையில் பயணித்தால் வெற்றி இலக்கை நோக்கி நகரமுடியாது எனவும் அவர் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உட்கட்சிப்பூசல் வலுத்துவருவதால்,...

ஆள் கடத்தல்காரர்களுக்கு ஆஸ்திரேலியா பணம் வழங்கியதை நிரூபித்தது இந்தோனேசியா!

ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி சென்ற 54 இலங்கையர்கள் உட்பட 65 பேரை ஏற்றிச்சென்ற படகை திருப்பியனுப்ப அதிலிருந்த ஆள் கடத்தல்காரர்களுக்கு 5 ஆயிரம் டொலர்கள் வழங்கப்பட்டதை இந்தோனேசியா நிரூபித்துள்ளதாக 'சிட்னி மோர்னிங் ஹெரால்ட்' என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்த செய்திக்கு ஆதாரமாக ஆள் கடத்தல்காரர்களுக்கு ஆஸ்திரேலிய அதிகாரகள் வழங்கினர் எனக் கூறப்படும் அமெரிக்க...

மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் ஊடகவியலாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்

தற்போதைய அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் ஊடகவியலாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்கள் தொழில் செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் எத்தகைய கருத்தியல்களை அல்லது தொலைநோக்கைக் கொண்டிருந்த போதும், ஊடகவியலாளர்களும் கலைஞர்களும் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு தாமரைத்தடாக...

முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் விளக்கம் கேட்கப்போவதாக மாவை தெரிவிப்பு

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு வருமாறு அழைக்கப்பட்டு அவர்களிடம் வேலைத்திட்டங்களுக்காகப் பணம் வழங்கப்பட்டது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் கூறியிருந்ததாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருப்பது தொடர்பில் அவரிடம் விளக்கம்கேட்டு கடிதம் அனுப்பப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். விக்னேஷ்வரனிடமிருந்து வருகின்ற பதிலையடுத்து, உண்மை நிலைமையை செய்தியாளர்களின் ஊடாகத் தெளிவுபடுத்துவதற்குத்...

யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு புதிய வைத்தியர்கள், சேவை நேரமும் அதிகரிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்குப் ஒன்பது வைத்தியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். வெளிநோயாளர் பிரிவில் 35 வைத்தியர்கள் இருக்க வேண்டிய நிலையில் இதுவரை காலமும் 15 வைத்தியர்களுடன் மாத்திரமே இயங்கி வந்தது. இந்த நிலையில் இன்று 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் புதிய வைத்தியர்களையும் இணைத்து 24 வைத்தியர்களுடன் இயங்கவுள்ளது. இதுவரை காலமும் இரவு...

நாளை முதல் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய திருவிழா ஆரம்பம்

ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா நாளைய 17.06.2015 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகின்றது. 29.06.2015 திங்கட்கிழமை சப்பறம் 30.06.2015 செவ்வாய்க்கிழமை தேர் திருவிழா 01.07.2015 புதன்கிழமை தீா்த்தத் திருவிழா 02.07.2015 வியாழக்கிழமை கொடி இறக்கம் மற்றும் தெப்பத் திருவிழாவுடன் நிறைவு பெறுகின்றது. திருவிழாக் காலங்களில் தினமும் மாலை கோவில் முன் கலையரங்கில் கலை...

மகேஸ்வரி நிதியத்துக்கு எதிராக முறைப்பாடு

பொதுமக்களிடமிருந்து பெருமளவான பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் யாழ். மகேஸ்வரி நிதியத்துக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் பி.சஞ்சீவன், கொழும்பிலுள்ள ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தில் செய்வாய்க்கிழமை(16), முறைப்பாடொன்றை பதிவு செய்தார். அதன்போது நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமந்திரன் உடனிருந்தார்.

நீதிமன்ற தாக்குதல் சம்பவம்: ஒருவர் கைது

யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது கடந்த மே மாதம் 20ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில், பிறவுண் வீதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பெருமாள் கோவில் பகுதியில் வைத்து, கொழும்பிலிருந்து வந்த விசேட குற்றத் தடுப்புப் பொலிஸார் திங்கட்கிழமை (15) மாலை கைது செய்தனர். நீதிமன்ற கட்டடத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் வளாகத்தில்...

யாழில் 7379 பேர் மாற்றுத்திறனாளிகள்!

யாழ் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளாக 7379 பேர் இருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இதில் 1100 சிறுவர்களும் 1320 பேர் போரால் பாதிக்கப்பட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். இதேவேளை நேற்றைய தினம் மாற்றுத் திறனாளிகளை சமூகத்துடன் சேர்ப்பதற்கான செயற்திட்டத்தின் கீழான விசேட செயலமர்வு ஒன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்ததுடன் குறித்த செயலமர்வில் மாற்றுத்...

காரைநகர் பிரதேச சபை தவிசாளருக்கு தொடர்ந்தும் மறியல்

காரைநகர் பிரதேச சபை தவிசாளருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22 ஆம் திகதி காரைநகர் வலந்தலை பகுதியிலுள்ள வீடொன்றில் அத்துமீறி நுழைந்து ஒருவரைத்தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் உட்பட ஐவரை கடந்த 13ஆம் திகதி ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்தனர். ஐவரும் நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளமறியலில்...
Loading posts...

All posts loaded

No more posts