Ad Widget

கூட்டுறவு அமைப்புக்களில் தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுக்க தொழில் வங்கி உருவாக்கம்

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கூட்டுறவு அமைப்புக்களில் தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் பொருட்டு தொழில் வங்கி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. வடமாகாண கூட்டுறவு அமைச்சின் வழிகாட்டலின்படி கூட்டுறவு அமைச்சின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்தத் தொழில் வங்கி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டுறவுத் தொழில் வங்கியில் பதிவு செய்ய விரும்புவோர் யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவுச் சபை அலுவலகத்தில் விண்ணப்பப்படிவத்தை பெற்று பூர்த்தி...

நாம் விட்ட பணிகள் அடுத்துவரும் புதிய அரசில் தொடரும் – டக்ளஸ்

சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவங்களைப் பாதிக்காத வகையிலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த கால யுத்த பாதிப்புக்களை ஈடுசெய்யும் வகையிலும் தேர்தல் சீர்திருத்தம் அமைய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொழும்பு, பொரளை, கொட்டா வீதி, கலாநிதி என்.எம்.பெரேரா நிலையத்தில்...
Ad Widget

எயிட்ஸ் நோயைத் தடுக்கும் மருந்தைக் கண்டுபிடித்த மாணவனுக்கு ஜனாதிபதி பாராட்டு!

எயிட்ஸ் நோயைத் தடுப்பதற்கான மருந்தொன்றை உற்பத்தி செய்து கொழும்பு நாலந்தா கல்லூரி மாணவன் ரகித்த தில்ஷான் மாலேவன சர்வதேச பாராட்டைப் பெற்றுள்ளார். இந்த மாணவனை நேற்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது திறமையின் மூலம் இலங்கைக்கு மாபெரும் புகழை ஈட்டித் தந்துள்ள ரகித்த தில்ஷான் மாலேவன...

நிதியுதவி பெற்றுக்கொண்ட த.தே.கூ எம்.பி.க்கள் யார்?

தெற்குக்கு அழைக்கப்பட்டு நிதியுதவி பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் யாரென்பதை சபைக்கு தெரியப்படுத்துமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா கோரியுள்ளார். இது தொடர்பில் தவராசா மேலும் கூறுகையில், 'வடமாகாண சபையை புறக்கணித்து விட்டு வடக்கின் அபிவிருத்திக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை...

சுதந்திரக் கட்சி வேட்பு மனுவிலும், தேசியப்பட்டியலிலும் மஹிந்தவின் பெயர் இல்லை! ஜனாதிபதி மைத்திரி உறுதி!!

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் வேட்பு மனு வழங்கப்படமாட்டாது. அத்துடன் தேர்தலின் பின்னரும் தேசியப்பட்டியல் மூலம் கூட எம்.பி. நியமனமும் இல்லை. - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

காரோட்டல், கணனி மேய்தல், உண்மை பேசல் இவற்றை இரு பாலாரும் படிக்க வேண்டும்!

காரோட்டல், கணனி மேய்தல், உண்மை பேசுதல் இந்த மூன்றையும் ஆண், பெண் இரு சாராரும் படிக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம். அன்றும் இன்றும் உண்மை பேசுதல் பொதுவாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். முரண்பாடு இல்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு உண்மை பேசுதல் மிக முக்கியமானதொன்றாக அமைகின்றது. முடிந்த வரையில் உண்மையைப் பேச மாணவ சமுதாயம் முன்வர...

மல்லாகத்தில் இளைஞர் குழுக்களிடையே முறுகல்! மோட்டார்சைக்கிளுக்கு தீ!! இருவர் கைது!!!

இரு இளைஞர் குழுக்களுக்கு இடையே நீண்ட நாட்களாக நிலவிய பகைமையால் சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்று தீயிட்டுக் கொழுத்தப்பட்டது. இதையடுத்து குழு மோதல் ஒன்று ஏற்படவிருந்த நிலையில் தெல்லிப்பழைப் பொலிஸாரின் உடனடி நடவடிக்கையால் தவிர்க்கப்பட்டது. யாழ்ப்பாணம் மல்லாகத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து...

வடக்கில் சுத்தமான நீரைப் பெற்றுக் கொடுக்க சீன நிறுவனங்கள் நிதி

வட பகுதிக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன், கிணறுகளை அமைக்க, சீன நிறுவனங்கள் இரண்டு முன்வந்துள்ளன. குறித்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து இதற்காக சுமார் 14,000 அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக சீன ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது. இதன்படி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஐந்து குடிநீர் கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் புது வைரஸ் பரவல் இதுவரை 9 கர்ப்பிணி தாய்மார் பலி!

இலங்கையின் பல பகுதிகளில் பரவிவரும் புதுவகையான வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த சில வாரங்களில் ஒன்பது கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பலர் மரணமடைந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இன்புளுயென்சா ´ஏ´யில் எச்1 என்1 எனப்படும் வைரஸ் காய்ச்சல் என இது அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இந்தக் காய்ச்சல் பரவியிருப்பதாக வவுனியா...

யாழ். நகரில் குழப்பம் விளைவித்த 30பேருக்கு பிணை

யாழ். நகரத்தில் குழப்பம் விளைவித்தமை, பொலிஸ் கண்காணிப்பகம் மீது தாக்கியமை, சமிக்ஞை விளக்கை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டவர்களில் 30பேருக்கு தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் இன்று வியாழக்கிழமை (18) அனுமதியளித்தார். இவர்கள் மாதாந்தோறும் வரும் இறுதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில்...

கொக்குவில் பாடசாலையில் போதைப் பொருள்: சந்தேகத்தில் ஒருவர் கைது!

கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து ஒரு தொகுதி போதைப் பாக்கு கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை காலை தரம் ஏழு மாணவர்கள் இந்த போதைப் பாக்கை எடுத்து பாடசாலை அதிபரிடம் கையளித்துள்ளார்கள். குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் உயர்தரத்தில் கல்விகற்கும், சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் பாடசாலையில்...

கொக்குவில் பகுதி பாடசாலையில் 10 ஆம் வகுப்பு மாணவன் 11ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தினார்!

கொக்குவிவில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இரண்டு மாணவர்களுக்கு இடையே எழுந்த முரண்பாடு கத்திக்குத்தில் முடிவுற்றது. நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ஜீ.சீ.ஈ சாதாரண தர மாணவர் ஒருவர் முகத்தில் காயமடைந்தார். நேற்று பாடசாலையில் அதிபர், உப அதிபர் இருவரும் விடுமுறையில் இருந்த சமயம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தரம் 10 இல் கல்வி கற்கும்...

பெற்றோரின் அரவணைப்பு இல்லாத இளைஞர்களே குற்றம் செய்கின்றனர் : பொலிஸ்

பிள்ளைகளுக்கு தேவையானவற்றை செய்வது பெற்றோர்களின் கடமை. பெற்றோர்கள் உரியவற்றை செய்யாமல் அரவணைப்பும் கொடுக்காமல் விடுவதால் தான் பிள்ளைகள் சமூகத்தில் குற்றச்செயல்களைச் செய்கின்றனர் என காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியம் 2க்கு பொறுப்பான பொறுப்பதிகாரி ஏ.எஸ்.பி.ஜஃவ்பர் தெரிவித்தார். பாடசாலை, தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று வரும் மாணவிகளுடன் சேஷ்டை செய்த குற்றச்சாட்டில் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 23...

சமுர்த்தி கொடுப்பனவை நிறுத்தியதாக மாற்றுத்திறனாளி பெண் முறைப்பாடு

சமுர்த்தி அலுவலரின் தன்னிச்சையான முடிவு காரணமாக சமுர்த்தி கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாகக்கூறி மாற்றுத்திறனாளியான பெண்ணொருவர் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனுக்கு வியாழக்கிழமை (17) மனுவொன்றை கையளித்துள்ளார். மனுவின் பிரதிகளை முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் மற்றும் துணுக்காய் பிரதேச செயலாளர் ஆகியோரிடம் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்துள்ளார். முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பழைய...

அந்தரத்தில் குழுங்கிய ஸ்ரீ லங்கன் விமானம்; 5 ஊழியர்கள் காயம்

பிரான்ஸின் பெரிஸ் நகரிலிருந்து 193 பயணிகளுடன் கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று வளிமண்டலவியல் பாதிப்புக்கு உள்ளானதில், அதில் சேவைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஊழியர்களில் ஐவர், சிறு உபாதைகளுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களில் நால்வர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல்.564 என்ற விமானத்தில் வந்த ஊழியர்களே இவ்வாறு...

 27,420 தொன் மெகீ நூடில்ஸ் அழிப்பு

மோனோசோடியம் க்ளூட்டாமேட் எனும் எம்.எஸ்.ஜீ சுவையூட்டி, அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ள 27 ஆயிரத்து 420 தொன் நிறையுள்ள மெகீ உடனடி நூடில்ஸ்களை நெஸ்லே நிறுவனம், சீமெந்து ஆலைகளில் இட்டு அழித்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு அதிகாரசபையினால் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் போது, மெகீ நூடில்ஸ் உற்பத்தியில் எம்.எஸ்.ஜீ சுவையூட்டி,...

திருமண பதிவுக் கட்டணம் குறைப்பு

திருமண பதிவுக் கட்டணத்தை குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது திருமண பதிவு கட்டணமாக அறவிடப்படும் 5,000 ரூபாயை 1,000 ரூபாயாக குறைப்பதற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று வியாழக்கிழமை(18) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது திருமண பதிவு கட்டணம் குறைக்கப்பட்டமை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த கட்டண குறைப்பு, 2015ஆம் ஆண்டு மார்ச்...

யாழ் நகரில் அதிகரித்துச் செல்லும் பெண்கள் மீதான சேட்டை – மக்கள் விசனம்

யாழ் நகரப்பகுதிகளில் குறிப்பாக யாழ் கஸ்தூரியார் வீதி, பெருமாள் கோவில் வீதி கன்னாதிட்டி வீதி ஆகிய வீதிகளில் பயணிக்கும் பெண்களுடன் சிலர் தகாத வார்த்தைகளால் பேசி சேட்டை செய்வதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த வீதிகளால் பயணிக்கும் தனியார் கல்வி நிலைய மணவிகள், மற்றும் தொழில் புரியும் யுவதிகளளாகியோரிடம் சிலர் தகாத வார்த்தைகளால் சேட்டை...

பாடசாலையில் போதைப் பொருள் வைத்திருந்த மாணவர்கள்!

யாழ்.கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் நால்வர் மாவா என்ற போதைப் பொருளை வைத்திருந்த குற்றசாட்டில் அவர்கள் சிறுவர் நன்நடத்தை அதிகாரிகளால் மடக்கி பிடிக்கப்பட்டனர். குறித்த சம்பவம் இன்று காலை கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, மாவா என்ற போதைப்...

அமானுஷ்ய உருவங்களால் பீதியில் ஒரு கிராமம்

தம்புத்தேகம ராஜபக்ஸகம கிராமத்தில் அமானுஷ்ய உருவங்கள் தமக்கு தொடர்ச்சியாக தென்படுவதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர். பெண், ஆண் மற்றும் சிறு பிள்ளையொன்றின் உருவங்களே தமக்கு தென்படுவதாகவும் பின்னர் உடனே அவை மறைந்து செல்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக ஏற்பட்ட பீதியில் பலர் கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பகல் மற்றும் இரவு நேரங்களில் இவற்றைக் கண்டுள்ளதாக கூறும்...
Loading posts...

All posts loaded

No more posts