Ad Widget

கூட்டமைப்பில் இடம் தராவிட்டால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் கூட போட்டியிடுவேன் : அனந்தி!

“நான் அரசியலுக்கு விரும்பி வந்த ஒரு பெண்ணல்ல என்னை அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லி தமிழரசுக்கட்சியினர் கொண்டுவந்து விட்டு இப்போது நட்டாற்றில் கொண்டு வந்து விட்டதுபோல் இப்போது ஒரு உணர்வு க்குள் இருக்கின்றேன்” என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட...

வடக்கு அமைச்சர்களுடன் வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் சந்திப்பு

வெளிநாடுகளுக்கான இலங்கைத்தூதுவர்கள் 30 பேர் அடங்கிய குழுவினர் வடமாகாண அமைச்சர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை (30.06.2015) வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வெளிநாடுகளுக்கு இலங்கைக்கான தூதுவர்களாக புதிதாக நியமிக்கப்பட்டவர்களும், ஏற்கனவே வெளிநாடுகளில் துணைத் தூதுவர்களாகப் பணியாற்றித் தூதுவர்களாக வேறு நாடுகளுக்கு இடம்மாறிச் செல்ல இருப்பவர்களும் வடக்கு மாகாணத்தின் தற்போதைய...
Ad Widget

மட்டக்களப்பு, வன்னி குறித்து முடிவில்லை: சுரேஷ்

யாழ்ப்பாணம், திருகோணமலை, திகாமடுல்ல தேர்தல் மாவட்டங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தெந்தக் கட்சிகள், எந்தெந்த அடிப்படையில் போட்டியிடவுள்ளன என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. மட்டக்களப்பு, வன்னி தேர்தல் மாவட்டங்கள் தொடர்பான முடிவுகள் இன்னும் எடுக்கப்பட வேண்டியுள்ளது என்று கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கூட்டமைப்பின் ஒவ்வொரு கட்சிக்கும் வேட்பாளர் பட்டியலில் ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்து...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம்: புதிய அரசாங்கம் அமைப்போம் – மஹிந்த முழக்கம்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். சற்றுமுன்னர் மெதமுலனவில் உள்ள அவரது வீட்டுக்கு முன்னாள் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அறிவித்தார். தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் விடுக்கும் அழைப்பை புறக்கணிக்க மாட்டேன் என்றும் அதற்கான உரிமை தனக்கு இல்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பொதுத் தேர்தலில்...

முன்னாள் போராளிகள் ஆறு பேர் புனர்வாழ்வின் பின் விடுதலை!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஆறு பேர் இன்று புனர்வாழ்வு பயிற்சி முடிவடைந்த நிலையில் சமூகத்துடன் இணைக்கப்பட்டனர். வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. யுத்த காலத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உதவினார்கள் மற்றும் அந்த அமைப்பில் அங்கத்துவம்...

வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து சம்பந்தனிடம் கோரிக்கை

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கல்வித் தகைமை உடையவர்களை நேர்மையான முறையில் தெரிவு செய்யுமாறு வட மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெயநாதன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இந்த கடிதத்தினை அவர் வழங்கியுள்ளார். குறித்த கடிதத்தில், கடந்த...

புலிகளின் சீருடையுடன் கைதானோருக்கு விளக்கமறியல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (28) கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் திங்கட்கிழமை (29) உத்தரவிட்டார். புதுக்குடியிருப்பு மற்றும் கைதடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மேற்படி இரு சந்தேகநபர்களிடமிருந்து...

காணிகளை விடுவிக்க இராணுவம் ஒத்துழைக்கும் – விஜயகலா

வலிகாமம் வடக்கில் 1,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுவதாக கூறப்பட்ட போதிலும், இதுவரையில் 600 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய காணிகளை மறித்து அடைத்துள்ள கம்பி வேலிகளை அகற்றுவதற்கு இராணுவத்தினர் ஒத்துழைப்பு தருவார்கள் என மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை திங்கட்கிழமை (29) பார்வையிடச் சென்ற...

இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் – சுமந்திரன்

வலிகாமம் வடக்கு காணிகளிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம் எனவும் அடுத்த கட்டமாக அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக நேற்று திங்கட்கிழமை (29) சென்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே...

ரவிராஜ் கொலை சந்தேகநபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் யாழ். மாவட்ட முன்னாள் உறுப்பினர் ரவிராஜ் கொலை சந்தேகநபரான கடற்படையைச் சேர்ந்த நிலங்க சம்பத் முனசிங்க பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது. சந்தேகநபரை 25 ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 ஆள் பிணையிலும் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டது....

வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்ய கோரி உள்நாட்டலுவல்கள் அமைச்சருக்கு சீ.வீ.கே. கடிதம்

வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்ய கோரி கடந்த வியாழக்கிழமை உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேராவுக்கு வட மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அத்துடன் உள்நாட்டலுவல்கள் அமைச்சருடன் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த விடயம் குறித்துப் பேசினார் என அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். விசாரணைகள் எதுவும் செய்யாமல் அவரை...

மஹிந்தவுக்கு வேட்புமனு இல்லை! தேசியப் பட்டியலும் வழங்கமாட்டேன்!! – மீண்டும் அடித்துக்கூறினார் மைத்திரி

பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு தான் ஒருபோதும் வேட்புமனு வழங்கப்போவதில்லை என்றும் தேசியப் பட்டியல் எம்.பி. நியமனத்தை வழங்கவும் தான் தயாரில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திங்கட்கிழமை திட்டவட்டமாக இடித்துரைத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்தர்களுடன் நேற்று...

இன்புளுவென்ஸாவுக்கு எதிராக போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை!

இன்புளுவென்ஸா ஏ.எச்.வன்.என்.வன் வைரஸ் நாடு பூராகவும் பரவுவதைத் தடுக்க, சுகாதார அமைச்சு போதுமான தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என, அகில இலங்கை தாதிமார் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. குறித்த வைரஸ் தொடர்பில் தற்போது உலகில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளை நாட்டில் பயன்படுத்தவில்லை என, அந்த சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார். இன்புளுவென்ஸா ஏ.எச்.வன்.என்.வன் வைரஸ் தொற்று ஏற்படக்...

தலா வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க எதிர்பார்ப்பு

எதிர்வரும் ஐந்து வருடங்களில் நாட்டில் ஒரு நபருக்கான தலா வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான முதலீடுகள், தொழிநுட்பங்கள் உள்ளிட்ட அணைத்து துறைகளிலும் விரிவான அபிவிருத்திகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தெஹிடிவிட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

இன்னும் த.தே.கூ இறுதி முடிவு எடுக்கவில்லை!

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் தமக்குள் வேட்பாளர்களைப் பகிர்ந்து கொள்வதில் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை என டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்று அல்லது நாளை நடைபெறவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய கூட்டத்தில் இழுபறியில் உள்ள யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களின் தொகுதி பங்கீடு குறித்து...

குடும்பப் பெண்ணைக் காணவில்லையென முறைப்பாடு

முல்லைத்தீவு விசுவமடுப் பகுதியைச் சேர்ந்த சுரேஸ் தேவிகா (வயது 22) என்ற ஒரு பிள்ளையின் தாயை கடந்த 23 ஆம் திகதியிலிருந்து காணவில்லையென அவரது கணவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை (29) முறைப்பாடு செய்துள்ளார். கடந்த 23 ஆம் திகதி வங்கியில் பணம் வைப்பிலிடச் சென்ற மனைவி, இதுவரையில் வீடு திரும்பவில்லையெனவும், கடந்த 7...

வலி.வடக்கு மீள்குடியேற்றப் பகுதியிலுள்ள பிரச்சினைகள் குறித்து அமைச்சர்கள் அடங்கிய குழு ஆய்வு!

வலி. வடக்கில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட வறுத்தலைவிளான் மற்றும் கீரிமலைப் பகுதிகளை மீள்குடியேற்ற இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். இவருடன் மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுமந்திரன், சரவணபவன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

வடக்கு, கிழக்கு, மலையகத்தில் ஈரோஸ் தனியாக போட்டி – பிரபாகரன்

எதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கிலுள்ள சகல மாவட்டங்களிலும் மலையகத்திலும் ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) தனித்து போட்டியிடவுள்ளது. தமது கட்சியின் சின்னமான ஏர் சின்னத்தில் இவர்கள் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக, அக் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரன் தெரிவித்தார். யாருக்கும் அடிபணிந்து போவது எமது நோக்கமல்ல மக்களின் விடுதலைக்காகவே எமது அரசியல்...

பனை மரங்களைப் போதைக்கு மட்டுமே பயன்படுத்துவது தமிழ் மக்களின் பேதைமை- பொ.ஐங்கரநேசன்

பனை மரங்களை நாம் கள்ளையும் வடிசாராயத்தையும் பெறுவதற்குரிய ஒரு வளமாக மாத்திரமே கருதி வருகிறோம். பல்வேறு பரிமாணங்களில் பொருளாதாரரீதியாக உதவக் கூடிய பனை மரங்களை, போதைக்கு மட்டுமே பயன்படுத்துவது தமிழ் மக்களின் பேதைமை என்று வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக் காட்டியுள்ளார். மன்னார், நானாட்டான் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின்...

ஊடகங்களுக்கு தடை விதித்தார் யாழ். அரச அதிபர்

மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனுக்கும் யாழ். மாவட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று மாவட்ட செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதற்கான செய்திகளை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், இது அரசியல் கூட்டம் இல்லை எனவும் அபிவிருத்தி தொடர்பிலான அலுவலக கூட்டம் என்றும் கடும் தொனியில் கூறிய யாழ். அரச அதிபர் வேதநாயகன் அங்கு செய்தி...
Loading posts...

All posts loaded

No more posts