Ad Widget

காணாமல் போனோரின் உண்மைத்தன்மையை அரசு உடன் அறிவிக்கவும் : யாழ்.பல்கலையில் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல்போனோர் தொடர்பிலான உண்மைத்தன்மையை அரசு அறிவிக்க கோரியும் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அரசியல் கைதிகள் மற்றும் காணாமல்போனோரின் உறவுகள் இணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டத்தில் காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் உறவுகளால் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டு...

கூட்டமைப்புக்கு எதிராக செயற்படமாட்டேன் – அங்கஜன்

தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யும் நோக்கத்தோடு தான் அரசியலுக்கு வந்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக செயற்படுவதற்காக அல்ல என வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் புதன்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...
Ad Widget

பம்பலப்பிட்டியில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பம்

கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட அதிர்வு, நிலநடுக்கமா என்பது தொடர்பில் கண்டறிவதற்கான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. பம்பலப்பிட்டி பகுதியில் நேற்று (01) மாலை நான்கு மணியளவில் மூன்று தடவைகள் அதிர்வுகள் ஏற்பட்டதை தாம் உணர்ந்ததாக அந்தப் பகுதி மக்கள் குறிப்பிட்டனர். அதிர்வுகள் உணரப்பட்டதை அடுத்து பாதுகாப்பான இடத்திற்கு தாம்...

யாழ்.மாவட்டத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை 7ஆக குறைப்பு!

யாழ்.மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. 2010ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடும்போது யாழ்.மாவட்டத்திலிருந்து தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இரண்டால், குறைந்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்திலிருந்து தெரிவான உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதாக இருந்தது. இம்முறை தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 ஆக...

கிளிநொச்சி மாவட்டத்தில் காணிகளை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அவற்றை விடுவித்து மீள்குடியேறுவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடனான சந்திப்பொன்று யாழ். மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (01) நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையிலேயே மாவட்டச் செயலாளர்...

180 கிலோகிராம் கஞ்சாவுடன் நால்வர் கைது

வடமராட்சி கிழக்கு அம்மன் கோவில் பகுதியில் 180 கிலோகிராம் கஞ்சாவுடன் 4 சந்தேகநபர்களை விசேட அதிரடிப் படையினர் வியாழக்கிழமை(02) அதிகாலை 4.30 மணியளவில் கைது செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் கூறினர். கடல் மார்க்கமாக கேரள கஞ்சாவை கடத்திவந்து இறக்கிக் கொண்டு இருக்கும் போதே நால்வரையும் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நால்வரையும் தொடர்ந்தும்...

வடக்கு, கிழக்குக்கு வெளியே போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கப்படும்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு தவிர்ந்து ஏனைய இடங்களில் போட்டியிடுவது தொடர்பில் மனோ கணேசனின் முற்போக்கு கூட்டணியுடன் கலந்துரையாடி இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட பின்னர் அது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா புதன்கிழமை (01) தெரிவித்தார். எதிர்வரும் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில்...

மாணவர்கள் மூவரை காணவில்லை

வல்வெட்டித்துறைப் பகுதியில் மூன்று மாணவர்களைக் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வல்வெட்டித்துறைப் பகுதியிலுள்ள தமது வீடுகளில் இருந்து நேற்று முன்தினம் பிற்பகல் ஒருமணிக்கு வவுனியாவிற்கு புறப்பட்டுள்ளனர். வவுனியாவிலுள்ள மாணவன் ஒருவனின் சகோதரனின் பிள்ளையின் பிறந்தநாள் வைபவத்திற்கு செல்வதாக கூறியே இந்த மூன்று மாணவர்களும் சென்றதாக பெற்றோர் வல்வெட்டித்துறை...

மாணவர்கள் மாணவர்களாக வாழ வேண்டும்: டீ.எம்.சுவாமிநாதன்

மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாக்கின்றமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் சமூகத்தில் இன்று உருவாகியுள்ளது. சமுதாயம் வளரவேண்டுமாயின் மாணவர்கள் இவற்றிலிருந்து விடுபட்டு தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். மானிப்பாய் இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கட்டத்திறப்பும் கல்லூரி முதல்வர் எஸ்.சிவநேஸ்வரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக...

குடும்பப் பெண் மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல்!

தனிமையில் வீட்டில் இருந்த இளம் குடும்பப் பெண்னை இனந்தெரியாதவர்கள் தாக்கியதில் அவர் மயக்கமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மதியம் குப்பிளான் தெற்கு சந்திக்கு அண்மையாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்கப்பட்ட இவர் இரண்டாம் நாளான நேற்றும் மயக்கம் தெளியாத நிலையில் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின்...

தாம் செய்த ஊழல்களை மூடி மறைப்பதற்காகவே பிரதமர் பதவிக்கு வரத் துடிக்கிறார் மஹிந்த!

தாம் செய்த ஊழல்களை மூடிமறைப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் பதவிக்கு வரத்துடிக்கின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் எம்.பியு மான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என மெதமுலனையில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நாட்டு மக்களுக்கு விடுத்த அறிவிப்பு தொடர்பில் வினவியபோதே மேற்கண்டவாறு...

கூட்டமைப்பை சீர்குலைக்கும் எந்த முடிவையும் புளொட் எடுக்காது!

கூட்டமைப்பை சீர்குலைக்கும் எந்த முடிவையும் புளொட் எடுக்காது. கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் எமது கட்சி வேட்பாளர்களை நிறுத்தும். இவ்வாறு புளொட் அமைப்பின் தலைவரும், வடக்கு மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதில்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை 2015 கால அட்டவணை இணையதளத்தில்

2015 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான மாற்றப்பட்ட கால அட்டவணை www.doenets.lk இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மாதம் 4ஆம் திகதி பரீட்சை ஆரம்பமாகி 13ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் தொடர்ந்து 17ஆம் திகதி பொதுத் தேர்தலின் பின்னர் மீண்டும் 24ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் 8ஆம் திகதியுடன் நிறைவடையும்...

இரண்டாம் தவணை விடுமுறையில் மாற்றம்!

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளமை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளமை ஆகிய காரணங்களினால் இரண்டாம் தவணை விடுமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய உயர்தர பரீட்சை நடைபெறவுள்ள பாடசாலைகள் தவிர்ந்து ஏனைய அனைத்து பாடசாலைகளும் ஓகஸ்ட் 31ஆம் திகதியுடன் 3ஆம் தவணைக்காக ஆரம்பிக்கப்படும் என்றும்...

தேர்தல்கள் ஆணையாளர் இன்று கட்சி செயலாளர்களை சந்திக்கிறார்

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. இன்று (02) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியானதன்...

கூட்டமைப்பில் இடம் தராவிட்டால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் கூட போட்டியிடுவேன் : அனந்தி!

“நான் அரசியலுக்கு விரும்பி வந்த ஒரு பெண்ணல்ல என்னை அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லி தமிழரசுக்கட்சியினர் கொண்டுவந்து விட்டு இப்போது நட்டாற்றில் கொண்டு வந்து விட்டதுபோல் இப்போது ஒரு உணர்வு க்குள் இருக்கின்றேன்” என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட...

வடக்கு அமைச்சர்களுடன் வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் சந்திப்பு

வெளிநாடுகளுக்கான இலங்கைத்தூதுவர்கள் 30 பேர் அடங்கிய குழுவினர் வடமாகாண அமைச்சர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை (30.06.2015) வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வெளிநாடுகளுக்கு இலங்கைக்கான தூதுவர்களாக புதிதாக நியமிக்கப்பட்டவர்களும், ஏற்கனவே வெளிநாடுகளில் துணைத் தூதுவர்களாகப் பணியாற்றித் தூதுவர்களாக வேறு நாடுகளுக்கு இடம்மாறிச் செல்ல இருப்பவர்களும் வடக்கு மாகாணத்தின் தற்போதைய...

மட்டக்களப்பு, வன்னி குறித்து முடிவில்லை: சுரேஷ்

யாழ்ப்பாணம், திருகோணமலை, திகாமடுல்ல தேர்தல் மாவட்டங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தெந்தக் கட்சிகள், எந்தெந்த அடிப்படையில் போட்டியிடவுள்ளன என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. மட்டக்களப்பு, வன்னி தேர்தல் மாவட்டங்கள் தொடர்பான முடிவுகள் இன்னும் எடுக்கப்பட வேண்டியுள்ளது என்று கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கூட்டமைப்பின் ஒவ்வொரு கட்சிக்கும் வேட்பாளர் பட்டியலில் ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்து...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம்: புதிய அரசாங்கம் அமைப்போம் – மஹிந்த முழக்கம்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். சற்றுமுன்னர் மெதமுலனவில் உள்ள அவரது வீட்டுக்கு முன்னாள் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அறிவித்தார். தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் விடுக்கும் அழைப்பை புறக்கணிக்க மாட்டேன் என்றும் அதற்கான உரிமை தனக்கு இல்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பொதுத் தேர்தலில்...

முன்னாள் போராளிகள் ஆறு பேர் புனர்வாழ்வின் பின் விடுதலை!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஆறு பேர் இன்று புனர்வாழ்வு பயிற்சி முடிவடைந்த நிலையில் சமூகத்துடன் இணைக்கப்பட்டனர். வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. யுத்த காலத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உதவினார்கள் மற்றும் அந்த அமைப்பில் அங்கத்துவம்...
Loading posts...

All posts loaded

No more posts