Ad Widget

மைத்திரி – மஹிந்த 9ஆம் திகதி அநுராதபுரத்தில் ஒன்றாக மேடையேறக்கூடும்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் 9 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டத்தில் ஒன்றாக மேடையேறுவார்கள் என பங்காளிக் கட்சித் தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடுவதற்கு கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மஹிந்த! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறுகிறது?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் களமிறங்குகிறார். இதனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் அதன் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் போட்டியிட மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வாய்ப்பு வழங்க...
Ad Widget

சூழலியல் விவசாயத்தை நோக்கி என்னும் தொனிப்பொருளில் யாழில் இடம்பெற்ற கலந்துரையாடல்

சூழலியல் விவசாயத்தை நோக்கி என்னும் தொனிப்பொருளில் சேதன விவசாயம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை (03.07.2015) யாழ் பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது. விவசாய இரசாயனங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் மூலமும் உணவுச்சங்கிலிகள் மூலமும் இரசாயன நஞ்சுகள் உடலைச் சென்றடைவதால் மனித ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக விவசாய இரசாயனங்களைப்...

பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவருக்கு விளக்கமறியல்!

பாடசாலை மாணவிகள் 5 பேரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரபல கல்லூரி ஒன்றின் ஓய்வுபெற்ற பிரதி அதிபரான சந்தேகநபரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் ம.கணேசராசா உத்தரவிட்டுள்ளார். 5 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என பருத்தித்துறை பொலிஸாரால்...

முன்னாள் போராளிகள் ஒன்றிணைந்து ‘ஜனநாயகப் போராளிகள்’ கட்சி உதயம்!

முன்னாள் விடுதலைப் புலிகளின் இயக்கப் போராளிகளின் பிரதிநிதிகளும் அவர்களது ஆதரவாளர்களும், நலன்விரும்பிகளும் இன்று வெள்ளிக்கிழமை (03.07.2015) காலை யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடி பொதுத்தேர்தல் நெருங்கிவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தாம் ஆற்றக்கூடிய - ஆற்றவேண்டிய - ஜனநாயக பங்குபணி குறித்து சுமார் மூன்று மணி நேரம் ஆராய்ந்தனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு...

காணாமற்போன வல்வெட்டித்துறை மாணவர்கள் கொழும்பில் மீட்பு

கடந்த ஜூன்மாதம் 30ஆம் திகதி முதல் காணாமற்போன வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மூன்று பாடசாலை மாணவர்களும் கொழும்பு கொம்பனித் தெருவில் இருந்து வியாழக்கிழமை (02) மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த எஸ்.விஸ்ணுராஜா (வயது 15), கம்பர்மலையைச் சேர்ந்த இ.தர்ஷன் (வயது 16), வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பா.சுகிர்தன் (வயது 15) ஆகிய 3 சிறுவர்களுமே...

மைத்திரி கொலை முயற்சி: புலி சந்தேகநபருக்கு கடூழிய சிறை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, பொலன்னறுவை மேல்நீதிமன்ற நீதிபதி அமின்டர் செனவிரத்ன முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே நீதிபதி, மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார். 2005/2006 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே இந்த கொலை முயற்சி...

இலங்கையிலும் 108 அம்புலன்ஸ் சேவை ஆரம்பம்

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 108 அம்புலன்ஸ் சேவை இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அம்புலன்ஸ் சேவை இலங்கையில் செயல்படுவதற்கான நிதி உதவியையும் இந்தியா அளிக்க உள்ளது. இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அம்புலன்ஸ் சேவையை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு இந்தியாவிடம் உதவியை நாடியிருந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம் இலங்கைக்குப் பயணம் சென்றிருந்தபோது...

யாழ் மாவட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களின் விபரம் கசிந்தது !

இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தெரிவு முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும் வேட்புமனு இறுதிநாளான ஜூலை 15ம் திகதி வரை தாமதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கூட்டமைப்பின் வேட்பாளர்களின் உறுதியாகியுள்ள வேட்பாளர்களின் விபரம் கசிந்துள்ளது. 7 வேட்பாளர்களுக்காக 10 வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். இவர்களில் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ,ஈ.சரவணபவன், சுரேஸ்...

இரகசிய முகாம்கள் தொடர்பான ஆதாரங்களை வெளியிடவும் – டக்ளஸ்

இலங்கையில் இரகசிய முகாம்கள் இருக்கின்றன என்றால் அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். நகரத்திலுள்ள விருந்தினர் விடுதியில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,...

ஐ.ம.சு.முன்னணியின் பிரதமர் வேட்பாளராக சமல்! ஜனாதிபதிக்கு யோசனை சமர்ப்பிப்பு!!

"எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருவேறு கருத்துகள் நிலவுகின்ற நிலையில், அதில் மத்தியஸ்தம் வகிக்கும் பிரிவினரால் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷவை பிரதமர் வேட்பாளராகக் களமிறக்குவது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது'' - என்று அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். இதேவேளை,...

மிருசுவில் படுகொலையின் பின்னணி

பதினைந்து ஆண்டுகள் என்பது மிகவும் நீண்ட காலம். நீதி கிடைப்பதற்கு நீண்ட காலம் எடுத்துள்ளது. இருப்பினும் இறுதியில் நீதியைப் பெற்றுத் தந்தமைக்காக நாங்கள் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம்’ என மிருசுவிலில் இடம்பெற்ற படுகொலையில் கொல்லப்பட்ட கதிரன் ஞானச்சந்திரனின் மனைவியும் ஞானச்சந்திரன் சாந்தனின் தாயுமான ஞானச்சந்திரன் பரமேஸ்வரி தெரிவித்தார். 19 டிசம்பர் 2000 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள மிருசுவிலில்...

விடுதலைப் புலிகளின் பெயரைக் கெடுத்து விடாதீர்கள்! – முன்னாள் போராளிகளிடம் சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரிக்கை

முன்னாள் போராளிகள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தற்போதைய அரசியல் சூழலில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும், அவர்களுக்குத் தோல்வி ஏற்படுமாயின் அது விடுதலைப் புலிகளுக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவில்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி விடும் என்றும் எச்சரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன். தற்பொழுது அரசியல் களநிலவரங்களைப் பார்க்கின்றபோது இனவாதத்தைத் தூண்டி...

சிங்களவர்களுக்கு ஒரு நீதி தமிழர்களுக்கு ஒரு நீதியா? – சிவாஜிலிங்கம்

முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சாவிற்கு பீல்ட் மார்சல் பட்டத்தை கொடுத்து அவருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியும் என்றால் ஏன் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசு உண்மை நிலையினை தெரியப்படுத்த வேண்டும்...

மகேஸ்வரி நிதியம் தொடர்பில் பொய்ப் புகார் – டக்ளஸ்

மகேஸ்வரி நிதியம் சம்பந்தமாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டில் உண்மைக்கு புறம்பான பல விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தற்போது இடம்பெறும் விசாரணையின்போது உண்மைகள் பலவற்றை உரியவர்கள் அறிந்துள்ளார்கள்' என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் வியாழக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

யாழில் பரவும் இன்புளுவன்சா; கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை!!

யாழ். மாவட்டத்தில் இன்புளுவென்சா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகியவர்கள் என்ற சந்தேகத்தில் இதுவரையில் 113பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணியொருவர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளார் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பவானி பசுபதிராஜா, வியாழக்கிழமை (02) தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த பணிப்பாளர், 'இந்த வைரஸ் தாக்கம் தொடர்பில் மே...

கிளிநொச்சி சிறுமி விற்பனை? அல்லது சிறுமியை காட்டேரி கடத்தியிருக்கலாம்!!!

கடந்த மே மாதம் 21ஆம் திகதி மாலை 4 மணியிலிருந்து காணாமற்போன கிளிநொச்சி, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் யர்ஷிகா (வயது 03) என்ற சிறுமியை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பது குறித்து கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று இரணைமடு தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி காரியாலயத்தில் புதன்கிழமை (01) நடைபெற்றது. மேலும், கிளிநொச்சி மாவட்டச்...

எமது தந்தை ஒரு திருடன் – நாமல்

எங்கள் தந்தை ஒரு திருடன். அவர் எவற்றைத் திருடியுள்ளார் என்பதை புதன்கிழமை (06), மெதமுலனையில் வைத்து கண்டுகொண்டோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய நாமல், 'எங்கள்...

அமைச்சர்களின் பாதுகாப்பு அரைவாசியாக குறைப்பு

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருப்பவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரச வாகனங்களை பயன்படுத்தினால் அதற்கான கட்டணங்களை அறவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சுகளின் செயலாளர்களுக்கு பணித்துள்ளார். தேர்தல் நடவடிக்கைகளுக்காக அமைச்சர்கள், அரசாங்கத்தின் வாகனத்தை பயன்படுத்தினால் அதற்கான கட்டணங்களை அறவிடுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே யோசனையை முன்வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, தற்போதைய அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள...

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் யாழ்ப்பாணம் விஜயம்!

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் செயலாளர் உட்பட நிர்வாகக்குழு உறுப்பினர்களும், யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜமொன்றினை மேற்கொண்டுள்ளனர். இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா தலைமையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்தக்குழுவில் செயலாளர் பாலேந்திரா உப தலைவர்களான பிரிகேடியர் ஹாரியவசம் நளின் றொபேட் பீரிஸ் மற்றும் உதைப்பந்தாட்டப் மத்தியஸ்தர் சங்க இணைப்பாளர் யாப்பா மற்றும்...
Loading posts...

All posts loaded

No more posts