. Editor – Jaffna Journal

நிலவுக்கு கொண்டு சென்ற சீன விதைகள் முளைத்தன

சீனாவின் சாங் இ–4 விண்கலம் மூலம் நிலவுக்கு எடுத்துச் செல்லபட்ட விதைகள் தளிர்விட்டிருப்பதாக சீன தேசிய விண்வெளி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. நிலவில் எந்த ஒரு உயிரியல் பொருளும் முளைவிட்டிருப்பது இது முதல் முறை என்பதோடு, நீண்டகால விண்வெளி ஆய்வுகளுக்கு இது முக்கிய முன்னெடுப்பாக கருதப்படுகிறது.... Read more »

வடக்கில் துரித அபிவிருத்திக்கு ரூபா 2000 மில். நிதி ஒதுக்கீடு

வடக்கில் பொருளாதார அடிப்படை வசதி ,சமூக அடிப்படை வசதி, ஜீவனோபாயம் மற்றும் சுயதொழில் வாய்ப்பு மற்றும் சிறிய கைத்தொழில்கள் மற்றும் தொழில் முயற்சி போன்ற நான்கு துறைகள் ஊடாக வடக்கில் துரித அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம்... Read more »

காவல்துறையினர் மீது தாக்குதல் – உப காவல்துறை பரிசோதகர் காயம்

சட்டவிரோத மணல் கடத்தல்காரர்களை கைது செய்ய சென்ற போது அவர்கள் காவல்துறையினரை தாக்கியுள்ளனர் என்று கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு ஏழு மணியளவில் தென்மராட்சி கொடிகாமம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட கெற்பேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. ‘கெற்பேலி கிராமத்தில் வழமை... Read more »

தைப்பொங்கல் நாளில் ஆரம்பமானது வீட்டுத் திட்டம்!

வடக்கு மற்றும் கிழக்கு வீடமைப்புத் திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்றையதினம் காலை இடம்பெற்றது. வலி.வடக்கு பிரதேச செயலகத்தின் தென்மயிலை கிராம அலுவலர் பிரிவில் முதலாவது வீட்டுக்கான அடிக்கல்லை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா நட்டார். இந்த நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்டச்... Read more »

தைப்பொங்கல் தினத்தில் யாழில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் நேற்றையதினம் (15) வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பட்டப்பகலில் நடைபெற்ற இவ்வாள்வெட்டு சம்பவத்தில் 2 இளைஞர்கள் படு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டதுடன் அதில் ஒரு இளைஞருடைய வலது கை கட்டைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மீட்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக... Read more »

தமிழ் மாணவர்கள் பல்கலைக்கு தேர்வாவதில் வீழ்ச்சி!

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்ற தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து செல்வதாக கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எஸ். சுதர்சன் கவலை வெளியிட்டுள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் சமூக சேவை ஒன்றியத்தின் தலைவர் என். நிராஜ் தலைமையில் வெள்ளி விழா காரைதீவு கலாசார மண்டபத்தில் கோலாகலமாக இடம்பெற்றது. இந்த விழாவில்... Read more »

வடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன் – ஆளுநர்

வடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன் என்று வடக்கின் புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். யாழ். இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற தைப்பொங்கல் தின விசேட நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் 2020 ஆம் மற்றும் 2021 ஆம்... Read more »

தமிழீழக் கனவோடு இருக்கக் கூடாது – எம்.ஏ.சுமந்திரன்

புதிய அரசமைப்பினூடாக, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும். தனி நாடு என்று காலத்துக்குக் காலம் கதைகள் வரும். ஒருமித்த நாட்டில் தமிழ் மக்களுக்கான தீர்வு வேண்டுமென்று தான் நாம் கேட்கிறோம். அதை விட்டு, தமிழீழக் கனவோடு இருக்கக் கூடாது. இப்படி நான் சொல்வதனால்,... Read more »

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் – கோட்டாபய

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாரென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இந்த வருடம்... Read more »

தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை வழங்குவேன் – பிரதமர் உறுதி

தமிழர்களை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்றும், தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை வழங்குவேன் என்றும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். நாட்டின் சமகால அரசியல் நிலமைகள் தொடர்பில், சர்வதேச ஊடகம் ஒன்றின் இலங்கைச் செய்தியாளருக்கு வழங்கிய நேர்காணலிலேயே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். இதன் போது... Read more »

பருத்தித்துறை பகுதியில் இளைஞர் படுகொலை

பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது, இளைஞர் ஒருவரை கோடாரியால் வெட்டிக்கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் வாசுதேவன் அமல்கரன்... Read more »

வடக்கு கிழக்கு வீடமைப்பு திட்டம் தைப்பொங்கலுடன் ஆரம்பம்: ஒவ்வொரு வீடும் 10 இலட்சம் பெறுமதி!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள 10 ஆயிரம் வீடுகளில், முதற்கட்டமாக 4,750 வீடுகளை அமைக்கும் பணி தைப்பொங்கல் தினத்துடன் –நாளை- ஆரம்பமாகவுள்ளது. தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழில் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர்... Read more »

மது போதையில் பெனாயிலை குடித்த பொலிஸ் உத்தியோகத்தர் பலி

மது போதையில் பெனாயில் குடித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ரத்னாயக்க (வயது 45) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடந்த சனிக்கிழமை இரவு... Read more »

யாழில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் வழிப்பறி மற்றும் தங்கச்சங்கிலி அறுப்பு போன்றன அண்மைக்... Read more »

வரவு செலவு திட்ட யோசனையின் போது கூட்டமைப்பு நிபந்தனைகளை விதிக்க வேண்டும்: சுரேஸ்

எதிர்வரும் வரவு செலவு திட்ட யோசனையின் போது கூட்டமைப்பு நிபந்தனைகளுடன் கூடிய ஆதரவை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஈ.பி.ஆர்.எப் கட்சியின் கிளிநொச்சி கிளையினரின் நிர்வாக தெரிவு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ்... Read more »

இந்திய மீனவரின் சடலம் கண்டெடுப்பு

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்கரை பகுதியில் இந்திய மீனவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் கடற்படையினரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை கடற்படையின் ராட்சத ரோந்துக் கப்பலானது தமிழ்நாடு மீனவர்களது படகுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தமிழக மீனவர்களது படகில்... Read more »

தொடரும் சீரற்ற காலநிலை – நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாடு முழுவதிலும் பல இடங்களில் இன்று (திங்கட்கிழமை) மழையுடன் கூடிய வானிலை காணப்படுமென அத்திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை... Read more »

உண்ணாவிரதப் போராட்ட அரசியல்கைதியின் உடல் நிலை மோசம்!

அனுராதபுரம் சிறைச்சாலையில் விடுதலை கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்ற சிவப்பிரகாசம் சிவசீலன் (32) என்ற அரசியல் கைதியின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைகள் முற்றுப்பெற்று, தீர்ப்பளிக்கப்படுகின்ற நிலையில் அவருடைய வழக்குத் தவணைகளுக்கு இராணுவ தரப்பினர் வருகை தருவதில் காட்டுகின்ற அசிரத்தையும்... Read more »

நாய்களிடமிருந்து அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்!

இலங்கையில் முதல் முறையாக நாய்களிடமிருந்து பரவக் கூடிய ஒருவகை நோய் இனங்காணப்பட்டுள்ளமையால் மக்களை அவதானமாக செயற்படுமாறு பேராதனை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். குறித்த நோய் இதுவரை காலமும் தென்னாபிரிக்கா நாடுகளிலேயே அதிகளவு பரவலாக காணப்பட்டு வந்த நிலையில், தற்போது இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக... Read more »

இந்திய துணை தூதரகத்தின் ஒழுங்கமைப்பில் வடமாகாண மாணவர்களுக்காக கல்வி கண்காட்சி!

இந்திய துனணத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்திய கல்வி கண்காட்சி பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சி மூலம் இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்கள் இந்தியாவில் கல்வி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் பாலச்சந்தர் குறிப்பிட்டார். இது தொடர்பில்... Read more »