பாடசாலை மாணவர் வெட்டுக் காயத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில்!!

மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட கைகலப்பில் பாடசாலை மாணவர் ஒருவர் வெட்டுக் காயத்துககு இலக்காகி சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்ட போது அங்கு வந்த கும்பல் ஒன்று மாணவருடன் வைத்தியசாலைக்குச் சென்றவர்கள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளது.

வரணி இயற்றாளையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் மாணவன் தாக்கப்பட்டார். தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த மாணவனை வைத்திய சாலைக்கு கொண்டு சென்றவர்கள் மீது வைத்தியசாலைக்குள் வைத்து இரவு 7 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது,.

சம்பவத்தில் மீசாலை பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர் ஒரவரே வெட்டுக்காயத்துக்குள்ளாகிய நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நண்பர்கள் கூடி மது அருந்தியபோது அவர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டு கைகலப்பாக மாறியதில் தாக்கப்பட்டார் என முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் குழு ஒன்று தாக்குதலில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தாக்குதல் நடத்திய கும்பல் தப்பி சென்றுள்ளது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor