மாதகல்லில் பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம்?

மாதகல் பகுதியில் காவல்துறையினரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கஞ்சா போதை பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்ற போதிலும் , தம்மால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை என காவல்துறை தரப்பு அடியோடு மறுத்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இளவாலை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட மாதகல் பகுதியில் கஞ்சா போதை பொருள் வியாபாரியை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது , சந்தேகநபர் அங்கிருந்து தப்பி செல்ல முற்பட்டார் எனவும் , அதன் போது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு சந்தேக நபரை மடக்கி பிடித்து கைது செய்ததாக அப்பகுதியை சேர்ந்தோர் தெரிவித்தனர்.

அது தொடர்பில் காவல்துறை தரப்பை கேட்ட போது , இளவாலை காவல்துறையினரினால் துப்பாக்கி பிரயோகம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எனவும் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட சித்தங்கேணி பகுதியில் வைத்து 7.2 கிலோ கஞ்சா போதை பொருளுடன் ஒருவரை கைது செய்தததாக தெரிவித்தனர

Recommended For You

About the Author: Editor