மக்களே எச்சரிக்கை ! நாளை முதல் சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம்!!

நாளை முதல் சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளை முதல் 5 ஆம் திகதி முதல் இம்மாதம் 15 ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு நேர உச்சம் கொடுக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலம் தெரிவித்துள்ளது.

இதனால் பகல் மற்றும் இரவு நேர வேளைகளில், அதிகூடிய வெப்ப நிலை நிலவும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் இந்த வாரத்தில் அதிகூடிய வெப்பநிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எதிர்வுகூறியுள்ளது.

எனவே, பொதுமக்கள் சூரிய வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு வெப்பம் நிலவும் காலப்பகுதிகளில் பொதுமக்கள் நீரைஅதிகளவில் அருந்தி தங்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறும், பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor