தென்னிலங்கையை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள குள்ள மனிதர்கள்

நாட்டின் பல பகுதிகளில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறித்த குள்ள மனிதர்கள், மக்களைத் தாக்கிவருவதாக முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அந்தவகையில், மாத்தறை மாவட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) குள்ள மனிதர்கள் தங்களை தாக்கியதாக சிலர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.

மாத்தறை, தொட்டமுன பகுதியைச் சேர்ந்த சிலரை நேற்றிரவு குள்ள மனிதர்கள் தாக்கியதாக அம்முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மாத்தறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோதும் எந்ததொரு ஆதாரமும் கிடைக்கவில்லையென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் இந்த தகவலினால் மாத்தறை மக்களிடத்தில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor