அரசுடன் இணைந்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் கூட்டமைப்பு உள்ளது -சுமந்திரன்

அரசுடன் ஒத்துழைத்து செயற்படாவிட்டால் அது தமிழ் மக்களுக்குப் பயங்கரமான விளைவை ஏற்படுத்துமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அரசுக்கு நாங்கள் முண்டுகொடுக்கவேண்டிய அவசியம் தற்போதைய நிலையில் எமக்கு உண்டு.

இல்லாவிட்டால் கடந்த ஒக்டோபரில் நடந்தது இப்போதும் உடனடியாக நடக்கும். அது தமிழ் மக்களுக்குப் படுபயங்கரமான ஒரு விளைவை ஏற்படுத்தும்.

ஆகவேதான் நாம் அரசுக்கு ஒத்துழைக்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சிக்காக நாங்கள் செயற்படவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாகவும் செயற்படவில்லை. எங்கள் மக்களுக்கு ஆதரவாகவே நாம் செயற்படுகின்றோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor