யாழில் கோடாரி வெட்டுக்கு இலக்காகி ஒருவர் காயம்

கோடாரி வெட்டுக்கு இலக்காகிய நிலையில், குடும்பஸ்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மந்துவில் கிழக்கைச் சேர்ந்த ந.கோபாலன் (வயது 60) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நீண்ட காலமாக நிலவி வந்த குடும்ப தகராறு கைகலப்பாக மாறியதில், குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளார்.

குடும்பஸ்தரை தாக்கிய சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor