யாழ்,கிளிநொச்சி உள்பட 11 மாவட்டங்களில் இன்று கடும் வெப்பம்

வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்கள் உள்பட 11 மாவட்டங்களில் இன்று வெப்பநிலை கடுமையாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களின் வெப்பிநிலை 32 தொடக்கம் 41 செல்சியஸாகப் பதிவாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், புத்தளம், பொலன்றுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவடங்களிலேயே இன்று (7) வியாழக்கிழமை அதிகளவு வெப்பநிலை காணப்படுமே வளிமண்டளவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் உடலில் வெப்பப்பிடிப்பு அதிகமாகி சோர்வு ஏற்படும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனால் அவதானமாகச் செயற்படுமாறு சுகாதார அமைச்சால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor