இராணுவ வீரர்களை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்: ஜனாதிபதி

இறுதி யுத்தத்தின்போது இராணுவ வீரர்கள் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை. ஆகையால் அவர்களை தண்டிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

யுத்தக்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றமை குறித்து ஜனாதிபதியிடம் கொழும்பிலுள்ள ஊடகமொன்று கேள்வி எழுப்பியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இராணுவத்தினர் குருதி சிந்தி நாட்டை மீட்டெடுத்தவர்கள். ஆகையால் அவர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதே எனது நிலைப்பாடு.

ஆனாலும், இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று யாரும் கூறினாலும் அவர்களை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன். சிலர் இராணுவத்தினர் மீது வீண்பழி சுமத்தி அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு வரலாறு பாடம் புகட்டும்.

நான் ஆட்சியிலிருக்கும் வரை இராணுவத்தை நிச்சயம் பாதுகாப்பேன்” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor