முழு அடைப்புப் போராட்டம் குறித்து கூட்டமைப்பு மௌனம்!

எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்புப் போராட்டம் குறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு மௌனம் காப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கூட்டமைப்பின் ஆதரவினை பெற்றுக்கொள்ளும் முயற்சிகளில் சிவில் சமூக அமைப்புகள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெனிவாவில் எதிர்வரும் 25ஆம் திகதி (திங்கட்கிழமை) ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் முக்கிய இடத்தை வகிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்குமாறும் கோரி, வடக்கு மற்றும் கிழக்கில் முழு அடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் அமைப்புகள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரும் அமைப்புகள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor