தெல்லிப்பளையில் பெண்ணை தாக்கி கொள்ளையில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது!

தெல்லிப்பளை பகுதியில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதுடன், வீட்டில் இருந்த பெண் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றசாட்டில் இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கட்டுவன் புலம் வீதியில் உள்ள வீடோன்றினுள் கடந்த சனிக்கிழமை வீட்டின் ஜன்னல் கம்பிகளை வளைத்து அதனூடாக அதிகாலை வேளை உட்புகுந்த மூன்று கொள்ளையர்கள், வீட்டில் நித்திரையில் இருந்தவர்களை எழுப்பி கத்திமுனையில் கொள்ளையிட்டனர்.

இதன் போது 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும், பின்னர் குடும்ப பெண்ணின் தலையை பலமாக கொள்ளையர்கள் தாக்கி தாலி உட்பட 17 பவுண் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் நேற்று முன்தினம் (ஞாயிற்றுகிழமை) மாலை கட்டுவான் பகுதி மற்றும் தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யபட்ட இருவரும் 19 வயதுடையவர்கள் எனவும், அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor