எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயாலும், ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாயாலும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய இதுவரை 147 ரூபாயிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 152 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதுவரை 123 ரூபாயிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 129 ரூபாயிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும், இதுவரை 118 ரூபாயாகவிருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 126 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 99 ரூபாயிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்று 103 ரூபாயிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

Recommended For You

About the Author: Editor