யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவன் மீது மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை காரணமாக குறித்த மாணவன் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், ஊடகவியலாளரும் பல்கலைக்கழக மாணவனுமான ப.சுஜீவன் என்பவரே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக வாளாகத்திற்குள் குறித்த மாணவனை சூழ்ந்த நான்காம் வருட மாணவர்கள், பகிடிவதை எனக்கூறி அவர் மீது சரமாரியாகத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் தலைப்பகுதியில் படுகாயமடைந்த நிலையில் குறித்த மாணவன் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor