யுத்தம் முடிந்து ஒரு தசாப்தம் ஆகியும் நீதியில் தாமதம் – சர்வதேச மன்னிப்புச்சபை

யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தம் ஆகியும் இன்னும் நீதிக்காக காத்திருக்கவேண்டியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை அதிருப்தி வெளியிட்டுள்ளது.

தெற்காசியப் பிராந்தியங்களுக்குப் பொறுப்பாக இயங்கிவரும் சர்வதேச மன்னிப்புச்சபை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் 2015 ஆம் ஆண்டில் வாக்குறுதி வழங்கியவாறு உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டினை ஈடுசெய்தல் உள்ளிட்ட பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய காலம் நிறைவடைகின்றது என மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், யுத்தம் முடிவடைந்து இவ்வருடத்தின் மே மாதத்துடன் பத்து வருடங்கள் பூர்த்தியடையவுள்ளன. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் எவ்வளவு காலம் உண்மைக்காகவும், நீதிக்காகவும் காத்திருப்பது என்ற கேள்வி எழுவதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபை தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor