மஹிந்த ராஜபக்‌ஷவின் இளைய புதல்வரின் திருமண நிகழ்வில் பிரதமர் ரணில்!

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வரான ரோஹித ராஜபக்ஷவுக்கு இன்று (24) திருமண பந்தத்தில் இணைந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் மூன்று புதல்வர்களில் மூன்றாமவரான ரோஹித்த ராஜபக்‌ஷவுக்கும் டட்யனா லீ ஜயரத்னவுக்கும் (Tatyana Lee Jayaratne) இடையில், மஹிந்த ராஜபக்‌ஷவின் சொந்த ஊரான தங்காலை வீரகெட்டியவில் இடம்பெற்ற இவ்வைபவம், இறுதி வரை மிக இரகசியமாக பேணப்பட்டு வந்தது.

இந்நிகழ்வில் குடும்பத்தின் மிக நெருங்கியோருக்கும் ஒரு சில பிரபலங்களுக்கும் மாத்திரம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor