சிறைக்கைதிகள் மீதான தாக்குதல்: விசாரணைக்குழு விரைந்தது!

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரிக்க, விசாரணைக்குழு அங்கு செல்லவுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தலைமையில் நியமிக்கப்பட்ட குறித்த குழு இன்று (வியாழக்கிழமை) அங்கு செல்லவுள்ளது.

கைதிகள் தாக்கப்பட்டமை தொடர்பான காணொளியொன்று அண்மையில் வெளியாகியிருந்த நிலையில், அது தொடர்பில் பாரிய சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கைதிகள் முழந்தாளிடப்பட்டு, பொலிஸார் அவர்களை துரத்தி துரத்தி தாக்குவதும், முழந்தாளிலேயே செல்லுமாறு பணிப்பதும் அந்த காட்சியில் தெளிவாகியுள்ளது.

இந்நிலையில், நீதியமைச்சர் தலதா அத்துகோரளவினால் விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. குறித்த குழு அங்கு சென்று மேலதிக விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

Recommended For You

About the Author: Editor