ஆளுநர்களின் பொறுப்பு என்ன? – தெளிவுபடுத்தினார் ஜனாதிபதி!

புதிய ஆளுநர்களை சந்தித்து மக்கள் சேவையிலும் அபிவிருத்தி பணிகளிலும் ஆளுநர்களின் பொறுப்பு என்னவென்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவுபடுத்தியுள்ளார்.

மக்களுக்கான சேவைகளை முறையாகவும் வினைத்திறனாகவும் வழங்குவதோடு அரசாங்கத்தின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக அனைத்து புதிய ஆளுநர்களும் நேரடியாக தலையிடுவார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற ஆளுநர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாவட்ட ரீதியாகவும் ஜனாதிபதி செயலகத்தினாலும் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.

Recommended For You

About the Author: Editor