முல்லைத்தீவில் இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் முயற்சி மக்களால் முறியடிப்பு!

இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் முயற்சி முல்லைத்தீவு மக்களினால் முறியடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு அலம்பிலில் நில அளவீட்டிற்கு சென்ற அதிகாரிகள் பிரதேச மக்களின் எதிர்ப்பினையடுத்து திரும்பிச் சென்றுள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள 5 ஏக்கர் தனியார் காணியில், ஒரு பகுதியில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ளதுடன், காணியின் மற்றுமொரு பகுதியில் இராணுவ முகாம் காணப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த காணியை இராணுவத்திற்கு வழங்கும் முகமாநேற்று (வியாழக்கிழமை) நில அளவை இடம்பெறவிருந்தது.

இதற்காகச் சென்ற நில அளவையாளர்களும் உத்தியாகத்தர்களும் பிரதேசவாசிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா ஆகியாரின் எதிர்ப்பினால் திரும்பிச்சென்றனர்.

குறித்த காணியில் இறந்தவர்களுக்கான நினைவிடமே அமையவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor