சர்வதேச பரதநாட்டியப் போட்டி- கிராமிய நடன பிரிவில் யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி முதலிடம்

இந்தியாவின் காஞ்சிபுரத்திலே ஏழாவது முறையாக இடம்பெற்ற ஹிடின் ஐடோல் (Hidden Idol ) சர்வதேச பரதநாட்டியப் போட்டியில் கிராமிய நடன பிரிவில் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் முதலாமிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனையை பதிவு செய்தனர்.

கடந்த வாரம் நடைபெற்ற இந்த கிராமிய நடனப்போட்டியில் பங்கேற்ற யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் 8 பேரும் யாழ்ப்பாண மண்ணுக்கும் ஈழத் தமிழரின் கலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

போட்டியில் சிவலிங்கம் தாகியன், சிவலிங்கம் தாருஜன், சதீஸ் யனோஜ், இராஜரட்ணம் மோனாலிஷன், துரைசிங்கம் றஜீவன், உதயகுமார் சுலக்சன், தங்கராசா தனுஜன், ரமேஷ் விஷ்வா ஆகிய மாணவர்களே பங்கேற்றனர்.

பிரபல நடன ஆசிரியர் நடன வித்தகன் துரைசிங்கம் வாகீசனால் இவர்கள் பயிற்றப்பட்டனர். இந்தக் குழுவுக்கு பொறுப்பாசிரியராக சிங்கராஜா செந்தூரன் பெரும்பங்காற்றினார் என்று யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

Recommended For You

About the Author: Editor