அடுத்த தேர்தலில் மைத்திரி – மஹிந்த கூட்டணியமைப்பது சாத்தியம்: தயாசிறி

அடுத்த தேர்தலில் மைத்திரி – மஹிந்த கூட்டணியமைப்பது சாத்தியமாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சுதந்திரக் கட்சி எப்போதும் கூட்டணியாகத் தான் களமிறங்கியுள்ளது. சுதந்திரக் கட்சி என்பது பிரதானக் கட்சியாகும். தற்போது ஒரு சரிவு ஏற்பட்டாலும் மைத்திரி- மஹிந்த- சந்திரிக்காவை இணைக்க வேண்டும் என்ற கட்டாயம் காணப்படுகிறது.

இது அனைத்து இனங்களுக்கும் சொந்தமான ஒரு கட்சியாகும். எனவே, இதனை பலப்படுத்தவே நாம் அடுத்தக்கட்ட செயற்பாடுகளை மேற்கொள்வோம்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலின்போது மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக களமிறக்கவே நாம் தீர்மானித்துள்ளோம். இதற்காக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும்.

இதுதொடர்பில் அவர் எம்மிடம் எந்தவொரு கருத்தையும் மேற்கொள்ளவில்லை. அவரிடம் கலந்தாலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம்” என தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor