போர் குற்றங்கள் தொடர்பில் தனது பொறுப்பு கூறலை இலங்கை மறைக்கின்றது: பிரித்தானியா

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமின்மை காரணமாக போர்குற்றங்கள் தொடர்பிலான பொறுப்பு கூறல் மறைக்கப்பட்டுள்ளதாக லண்டன் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான திணைக்கள உதவி பேராசிரியர் கேட் க்ரோனின் பார்மன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பற்றிய தகவல்களை வெளியிடும் யூ.என்.டிஸ்பெச் இணையத்தளம், கேட் க்ரோனின் பார்மன் இவ்வாறு குறிப்பிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. இதன்போது பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதுடன் 40,000க்கும் மேற்பட்ட தழிழர்கள் கொல்லப்படனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் போர்குற்றங்கள் தொடர்பில் இதுவரை நீதிக்கு முன் எவரும் நிறுத்தப்படவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில். தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்தீரதன்மையின் ஊடாக யுத்தத்தின் போது ஏற்பட்ட போர் குற்றங்களை இலங்கை அரசாங்கம் மறைக்கின்றதெனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆகையால் தற்போதைய சூழ்நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பிலான பொறுப்பு கூறலை வெளியுலகத்திற்கு கொண்டுவருவதற்கான சவாலை இலங்கையின் செயற்பாடு ஏற்படுத்தியுள்ளதாகவும் கேட் க்ரோனின் பார்மன் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor