இலங்கை நீதிமன்றங்களுக்கு புத்தாண்டு விடுமுறை!

இலங்கையிலுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் புத்தாண்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது.குறித்த விடுமுறை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 7ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளது. அந்தவகையில் 2019ஆம் ஆண்டின் புத்தாண்டின் பின்னர் ஜனவரி 7ஆம் திகதி நாட்டின் சகல நீதிமன்றங்களும் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும்

ஆகையால் தான் இலங்கையிலுள்ள உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் மிகவும் முக்கியான வழக்கின் மனுக்களை விரைவாக விசாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையிலுள்ள நீதிமன்றங்களுக்கு ஒவ்வொரு வருட இறுதியிலும் இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டு வருகின்றமை வழமையாகும்

Recommended For You

About the Author: Editor