கைபேசி தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ முறையிட பொலிஸாரின் புதிய இணையத்தளம்!

கைபேசி காணாமற்போனால் அல்லது திருட்டுப் போயிருந்தால் அதுதொடர்பில் உனடியாக முறைப்பாட்டை வழங்கும் வகையில் இலங்கை பொலிஸார் புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.

www.ineed.police.lk என்ற புதிய இணையதளமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் அறிவுரைக்கமைய இந்த இணைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

இணையத்தளத்துக்குள் சென்று முறைப்பாட்டாளர் தனியான கணக்கை ஆரம்பித்து முறைப்பாட்டை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor