வைத்தியசாலையில் தங்கியிருந்தபடி நோயாளர் காவு வண்டியில் சென்று பரீட்சை எழுதும் மாணவி

டெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவியொருவர், க.பொ.த. சாதாரணதர பரீட்சை எழுதிவருகிறார்.

குறித்த மாணவி நோயாளர் காவு வண்டியில் பரீட்சை மண்டபத்திற்கு வந்து, பரீட்சை எழுதி வருகிறார்.

யாழ் நகரிலுள்ள மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவியொருவர் திடீரென டெங்கு நோய்த்தொற்றிற்கு இலக்காகியுள்ளார். இதனையடுத்து சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பரீட்சைக்கு தயாராகியிருந்த அந்த மாணவி, டெங்கு தொற்றால் பரீட்சை எழுதும் வாய்ப்பை கைவிட தயாராக இருக்கவில்லை.

இந்நிலையில் அவரது உடல்நிலையை ஆராய்ந்த வைத்தியர்கள், வைத்தியசாலையில் தங்கியிருந்தபடியே பரீட்சை எழுத அனுமதித்தனர்.

இதற்காக வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டி ஏற்பாடு செய்யப்பட்டதுடன் அவரை பரீட்சை மண்டபத்திற்கு அழைத்து சென்று, பரீட்சை முடிந்ததும் மீண்டும் வைத்தியசாலைக்கு நோயாளர் காவுவண்டி மூலம் அழைத்து செல்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor