இரணைமடுக் குளத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்படுகின்றன – அவதானமாக இருக்குமாறு மக்களிடம் கோரிக்கை

இரணைமடுக் குளத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், அதன் ஆறு வான் கதவுகள் இன்று முற்பகல் 11 மணியளவில் திறக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் தாழ்வான பகுதிகளான பன்னங்கண்டி, ஊரியான் , முரசுமோட்டை, வட்டக்கச்சி பண்ணைப் பகுதி மற்றும் கண்டாவளை ஆகிய பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசத் திணைக்களம் கேட்டுள்ளது.

இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் நேற்றுப் பிற்பகல் 35.05 அடியை எட்டியது. குளத்தின் மொத்த கொள்ளளவு 36 அடியாக உள்ளது. அதனால் இன்று சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் 6 வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor