ரணிலை பிரதமராக்க முடியாது – திட்டவட்டமாக மீண்டும் அறிவித்தார் மைத்திரி!

நாடாளுமன்றத்திலுள்ள 225 பேரும் கையொப்பமிட்டு தம்மிடம் பரிந்துரைத்தாலும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்ததாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றையதினம் இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் சந்தித்து பேசியிருந்தனர்.

குறித்த சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த சந்திப்பு எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor