புதிய நாணயக் குற்றிகளை வெளியிட்டுவைத்தார் பிரதமர் மஹிந்த!

இலங்கை மத்திய வங்கியினால் நேற்றையதினம் 10 ரூபாய், 5 ரூபாய், 2 ரூபாய் மற்றும் 1 ரூபாய்க்கான புதிய நாணயக் குற்றிகள் வெளியிடப்பட்டன.

நாடாளுமன்றில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ இந்த புதிய நாணயக் குற்றிகளை வெளியிட்டார்.

பார்வைத் திறன் குறைப்பாடு உடையவர்களுக்கான விசேடமாக வடிவமைக்கப்பட்ட இந்த நாணயக் குற்றிகள், டிசம்பர் மாதம் 3 ஆம் திகதிமுதல் பாவனைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor