நாடாளுமன்ற செங்கோலின் படம் பொறித்து பிரதேச சபை கடிதத் தலைப்பு!

நாடாளுமன்ற செங்கோலின் படம் பொறிக்கப்பட்ட கடிதத்தலைப்பை நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் பயன்படுத்தியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சபையின் அனுமதியை பெறாமல் குறித்த கடிதத் தலைப்பை அவர் பயன்படுத்தியதோடு, பிரதேசசபையின் பழைய இலட்சினையும் அதில் பொறிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாதென நல்லூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், அரசின் இலட்சினை மற்றும் செங்கோலின் படத்தை பிரதேசசபை உறுப்பினர்கள் தமது கடிதத் தலைப்புகளில் அனுமதியின்றி பயன்படுத்த முடியாதென உள்ளூராட்சி ஆணையார் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து முறைப்பாடு செய்யப்படுமிடத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor