பதவியைத் துறக்கத் தயாராகவிருந்தேன் ஆனால் வன்முறையால் என்னை வெளியேற்ற முடியாது – மகிந்த

“நாடாளுமன்றில் சட்டரீதியாக எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்குமாயின் பதவியை துறக்க தயாராக இருந்தேன்” என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பலாத்காரமாக அல்லது வன்முறைகளால் என்னை வெளியேற்றுவது இலகுவான காரியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

வீரகெட்டியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் .தனைத் தெரிவித்தார்.

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது எதிர்ப்புக்களை வெளிப்படுத்துவது பிரச்சினையல்ல. ஆனால் நாடாளுமன்றிற்கு கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை எடுத்து வருவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சபாநாயகர் அதற்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையோ ஒழுக்காற்று நடவடிக்கையோ எடுக்கவில்லை. சட்டவிரோதமாக நாடாளுமன்றில் தொடர்ந்து செயற்படுவார்களாயின் எமது தரப்பினரும் அதற்கு ஏற்ற வகையில் பதில் வழங்குவார்கள் ” என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor