பாதுகாப்பு அமைச்சின் கீழ் பொலிஸ் திணைக்களம்! – ஜனாதிபதி உத்தரவு

பொலிஸ் திணைக்களம் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்புக்கு ஜனாதிபதி கட்டளையிட்டுள்ளார்.

அமைச்சுக்களின் கடமைகள் மற்றும் அவற்றின் கீழான திணைக்களங்கள் தொடர்பான அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பிலேயே இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஆட்சிக் காலத்திலிருந்து தனியாக சட்டம் ஒழுங்கு அமைச்சு அமைக்கப்பட்டு அதன் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்த பொலிஸ் திணைக்களம் தற்போது மீளவும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

கொலை, கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடை முப்படைகளைச் சேர்ந்த தளபதிகள், அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருவதைத் தடுக்கும் வகையிலேயே ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார் என்று அறியமுடிகின்றது.

Recommended For You

About the Author: Editor