என்னை சீண்டினால் பல துடுப்புச்சீட்டுக்களை பயன்படுத்த நேரிடும்! : மைத்திரி எச்சரிக்கை

தற்போது நான் எடுத்துள்ள முடிவுகள் தொடர்பில் என்னை எவரும் சீண்டினால் பல துடுப்புச்சீட்டுக்களை பயன்படுத்த நேரிடும். இதனால் வித்தியாசமான விபரீதங்களை சந்திக்கவேண்டி ஏற்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதன்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

“எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் நாங்கள் பெரும்பாண்மையை நிரூபிப்போம். இதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.

மேலும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஆட்சியை கைப்பற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இருப்பினும் அதனால் எந்ததொரு பயனும் ஏற்பட போவதில்லை. நாமும் அவரை மீண்டும் பிரதமராக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

அந்தவகையில் என்னிடம் கைவசம் பல்வேறு அஸ்திரங்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி அதிர்ச்சி வைத்தியம் ஏதும் கொடுக்க வேண்டுமானாலும்அதனையும் செய்வேன்.

இதனால் என்னுடன் வீணாக விளையாடுவதனை சம்மந்தப்பட்டவர்கள் நிறுத்திகொள்ள வேண்டும்” என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor