இந்தியாவின் திட்டம் சீனாவிற்கு கைமாறியது: நாமல்

இந்தியாவிற்கு கொடுத்த திட்டங்கள் ஒன்றும் முறையாக நிறைவேற்றபடாதமையினால் சீனாவிடம் அத்திட்டங்களை கையளித்தோமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடே செய்திப்பிரிவுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலைய திட்டங்கள் உள்ளிட்ட பலவற்றை ஆரம்பத்தில் இந்தியாவிற்கே கையளித்தோம்.

ஆனால் அத்திட்டங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளவில்லை.

மேலும் இலங்கைக்கு பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு சீனா உதவியுள்ளது. அதனடிப்படையிலேயே சீனாவிடம் திட்டங்களை கையளித்தோம்.

அரசியல்வாதிகள் என்ற ரீதியில் மக்களின் நலனே எம்மை பொறுத்தவரை முக்கியம். அந்தவகையில் சீனா இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு முன்வந்தமையால் அவற்றிடம் கையளித்தோம்.

ஆனால் சீனா, இந்தியாவுடனான இலங்கையின் உறவுகள் தொடர்பில் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர்.

இருப்பினும் புதிய அரசாங்கம் இந்தியாவுடன் தொடர்ச்சியாக நல்லுறவை ஏற்படுத்தும் விடயங்களில் கவனம் செலுத்தும்” என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor