முன்னாள் பிரதமர், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக CID இல் முறைப்பாடு!

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.

அமைச்சர்களின் செயலாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் அஜித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரவையின் உறுப்பினர்கள் பொதுச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தியே இந்த முறைப்பாடு இன்று(வியாழக்கிழமை) செய்யப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டு, இன்றுடன் 13 தினங்கள் கடந்துள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் அலரி மாளிகையில் தங்கியிருந்து பொது சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், முன்னாள் அமைச்சர்கள், பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்கள், வீடுகளை இதுவரை கையளிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor