ஜனாதிபதிக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றை உடனடியாகக் கூட்டி அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணவேண்டும். மேலும் தாமதித்தால் இலங்கை மீதான சர்வதேசத்தின் மதிப்புக் குறைவடையும்”

இவ்வாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர், ஹீதர் நுவேட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் தனது கீச்சகத்தில் தெரிவித்துள்ளதாவது:

“நாடாளுமன்றை உடனடியாகக் கூட்டி அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்துகின்றோம்.

மேலும் தாமதித்தல் இலங்கை மீதான சர்வதேசத்தின் மதிப்பைக் குறைக்கிறது. அத்துடன் நல்லாட்சி, உறுதிப்பாடு மற்றும் செழிப்பு ஆகிய மக்களின் வேணவாக்களும் பாதிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor